Wednesday 21 May 2014

சுதந்திரம் !!



எண்ணங்கள் தான்
மனிதனை உருவாக்கும் !
பால்ய வயதில் ஆரம்பித்து 
பருவ வயது வரை 
அவன் காணும் காட்சிகள் 
அவனின் குணத்தை செதுக்கும் !

பார்க்கும் பார்வையை மாற்றி 
சமுதாயம் வளர துணையாய் இருங்கள் !!
சிறார்களையாவது விட்டு வையுங்கள் !
மிருகமாக மாறாதீர்கள்!
தேசத்தை இழிவுபடுத்தாதீர்!!

அறப்போராட்டங்கள் பல புரிந்து,
ஆதரவில்லாமல் பல உயிர்கள் மடிந்து,
அபிப்ராயங்கள் பல  கழிந்து,
அஹிம்சா வழியை  தேர்வுசெய்து,
ஆங்கிலேயர்  ஆட்சி  கடந்து,
அரும்  பாடுபட்டு
விடுதலை அடைந்த நம்  நாட்டின்  நிலை,
அந்தோ  பரிதாபம்  !
பண்பாடு  இருந்தாலும்,
பாகுபாடு இல்லை !!
வளர்ச்சியில் போட்டிபோடுகின்றன 
பல நாடுகள் ,
நாமோ  
ஜாதியில் ஆரம்பித்து,
வீதியிலும்  பிரிவினை  கோலூற்றுகிறோம்!
வெட்க கேடான  செயலுக்கு
வக்காலத்து  வாங்கவும்  வருவர்
வர்ண கொடிகளை ஏந்தியோர் !
அறுபது  ஆண்டுகளுக்கு மேலாகியும் 
அரும்புகளுக்கு  கூட   சுதந்திரம்  கிட்டவில்லை,
சிறார் வேலையிலிருந்தும் சரி!
சில காமுகர்களிடமிருந்தும்  சரி !!
சுதந்திரம் கிடைத்துவிட்டதாம், 
நல்ல  வேடிக்கை  !
பலர் வந்து மேலிடம் சென்றாலும்,
மனிதனின் முற்போக்கு எண்ணத்தின் மாற்றமே
சுற்றுபுறத்தை சுகாதாரமாக்கும் !
சகோதர உணர்வை மேலோக்கும் !
சுதந்திர நாட்டை உருவாக்கும் !!
சரித்திர இந்தியாவையும் படைக்கும் !!

Sunday 18 May 2014

வார இறுதி !!

வார இறுதி
வசந்தத்தின் முடிவு
வருந்ததின் ஆரம்பம் :P

வார இறுதி வந்தாலே  
வாடிக்கை தான்,
கேளிக்கைகளும் வேடிக்கைகளும் !
வாடைக் காற்றோ 
வசந்தக் காற்றோ
வந்து தீண்டினால் போதும் , 
வருத்தங்களை மறந்து,
அலுவல்களை மறந்து,
விந்தையான மானிடர்களை சந்தித்து,
விருப்பமானவர்களின் நேரத்தை களவாடி 
நேசங்களை பரிமாறும் 
வேதனை இல்லா நாட்களே 
சனியும் ஞாயிறும்,
முடியும் தருவாயில் 
முடியக்கூடாதென்ற  ஏக்கமும்
மறுபடியும் குறிப்பேட்டு தாள்களை 
கிழிக்கும் ஆவலில்,
துவங்கும் நாள் தான் திங்கள் !!!

Saturday 17 May 2014

சிவகாமியின் சபதம்

நீண்ட இடைவெளியில் ஒரு புதினத்தை முடித்தேன் !!
கல்கி யின் மற்றுமொரு காவியம் !!
வைத்திருக்க வேண்டிய ஒரு திரவியம் !!

சிவகாமியின் சபதம்
மனம் கவர்ந்த புதினம்,
நெஞ்சம் உறைய வைக்கும்
ஒரு பெண்ணின் சபதம் ,
மனம் கவர்ந்தவன்
உறை நழுவிய வாளானான்!
புனிதன்
பித்தனானான் !

பெண்ணின் நேசம் ,
பொறுமையில்லா கோபம் ,
போரையும் உருவாக்கும்
என்பதின் சான்று
இந்தக் கல்கியின் காவியம் !
புதிர்கள் நிறைந்திருந்தாலும்,
புன்முறுவல் பூத்து மூடி வைத்தேன்,
பேரழகியின் முடிவை ஆமோதித்து !!