Thursday 23 March 2017

கலைந்த கனவு !!

வெற்று செங்காடாய் தொடங்கிய
அவனின் வாழ்க்கை
வேகமான அவளின் பரிவால்
வானவில்லாக மாறியது !!
விசித்ரமான அனுபவங்கள்
விந்தையான செயல்கள் !
வேடிக்கையான பேச்சுக்கள்!
வழக்கத்திற்கும் மாறாக
அவனை தீண்டும் வசந்தத்தை
வாரிக்கொண்டான் 
வண்ணமலர்கள் என்றெண்ணி!
அவ்வளவு பேரின்பம்
அவளுடன் இருந்தால் !
நிரந்தரமாகக்கூடாதா
நினைத்த நாழிகைகள் பலநூறு !!
நீரில் கரையும் நிலவு போல 
கலைந்து கனவானது !
நிஜத்தின் பிடியில் 
விதி விளையாடுவதால் !
நிராசையானாலும்
அவளின் நினைவுகள் 
என்றென்றும் 
அவனின் நிழலாக நகரும் 
அவளின் வாசமிருக்கும் வரை !
அவனின் ஸ்வாசமிருக்கும் வரை !

Tuesday 21 March 2017

கனவிலே!!

கால நேரம் பார்ப்பதில்லை
காதல் புரிய நேரமில்லை
கதை பேசும் சுற்றாருடன்
கண்கள் நிறைய ஆர்வத்துடன்
கவிதை தொடுக்க ஆரம்பித்தேன்
கண் முன்னே தெரியும் கயவர்களை பார்த்து !!
எங்கே என்னை கவர்ந்தவன்
கண்டு கொள்வானோ என்ற ஏக்கம் ..
திரும்ப வேண்டும் என்ற ஆவலுடன் 
தேடினேன் திரை மறைவிலிருந்து !!
காரிருளில் மின்னும் மாணிக்கமாய்,
எட்டுத் திக்கும் தேடினாலும்,
எங்கும்  கிடைக்கா அதிசயம் அவன் !
அன்று போல் இன்றும் விலகினாய்,
கடைக் கண் பார்வை மட்டும் போதுமென்று !
மிரளத்தான் முடியும் !
மனதினோரத்தில் 
பசுமரத்தாணி போல்
பதிந்த உன் நினைவுகளை ,
என் பிம்பம்
பாரம் பாராமல்,
உன் கரம் பற்றிய நாட்களை,
கரை படாமல்
காதல் செய்யும்
கனவிலே! 

Tuesday 7 March 2017

உணர்ச்சிகள் !!

உணர்வற்று கிடக்கும் உடம்பில், உணர்ச்சிகள் மறையக் கூட உரித்த நேரம் ஆகும் ! நம்மில் ஒருவராய் நாதியற்று நடக்கும் போது, கவனிக்காத இவ்வுலகம் ! நடுக்கடலில் கொல்லப்படும் போது, கவனிக்கும்! நடுத்தர மக்கள், கவனித்து என்ன பயன் ? நாடு ஆளும் தலைவர்கள் கவனிப்பார்களா ? மாட்டார்கள் ! நந்தினி கொலை, நெடுவாசல் ஏமாற்றம், விவசாயிகளின் தற்கொலை, எத்தனை போராட்டங்கள்! எவ்வளவு வேதனைகள், எட்டி உதைக்கத்தான் உரிமை கொடுத்தோம் போல ! இதில் இவர்களின் , கட்சி பிரிவினைக் கூத்து வேறு ? இந்த கூட்டு களவாணிகளின் சதியால் மடிவோமே தவிர இனி ஒரு விதி செய்வோமென்பது கூற்றாக மட்டுமே ஆகும் இத்திரு நாட்டில் வாழ்ந்தால் !