Thursday 29 December 2016

உனக்காக !

உனக்காக வாழு!
உன் ஆசைகளுக்காக வாழு!
உன்னை விட
உன் ஆசைகளை அடைய,
உரிமை கொண்டாட, 
ஒருவரும் இல்லை ! 
உன் மனம் சொல்வதை,
கேட்காதே !
உன் புத்தி சொல்வதை, 
கேள் !
மனம் அலைபாயும் !
புத்தி அலைக்கழிக்கும் !
மனதை கட்டுப்படுத்தும் !
ஆற்றலைக் வெளிக்கொணரும் !
நீ ஏங்கும் இடத்தை 
அடையலாம் 
உன் முயற்சி இருந்தால் !

லட்சியம் 
காதல் 
நட்பு
தன்னம்பிக்கை
சந்தோஷம்
இப்படி பல இருக்கிறது வாழ்க்கையில்! 
இந்த நொடி மட்டுமே நிஜம் !
நிரந்தரமற்ற வாழ்க்கையில் 
முயற்சிகள் தேவை உனக்கு பிடித்ததை அடைய !

P.S: என் பெட்டகத்திலிருந்து !

Monday 26 December 2016

கண்கள்!

காந்தம் தானடி
உன் கண்கள் !
கவலை மறந்தேனடி 
உன் இருப்பில் !
காதல் வயப்பட்டேனடி
உன் வசீகரிப்பில்!
கவிஞனும் ஆனேனடி
காதலி உன் விழியால் 
என் உலகை ரசிப்பதால் !


கண்கள் 
கருமேகங்கள் 
கவிழ்ந்துவிட்டேன்
காதலி கண்சிமிட்டியவுடன் !!



P.S: Written as per request.

Sunday 25 December 2016

தென்றல்!

என்னவளின்
கேசத்தை வருடுபவள்,
தாயைப் போல !
தேகத்தை தேற்றுபவள்,
தோழியைப் போல !
உரிமையோடு இருப்பவள் ,
உருவமற்றவள்!
நாளும் இருப்பவள்,
நாடோடி அவள் !
யார் அவள் ? 
மிருதுவான இசையில் 
மனதை மஞ்சமாக்கி 
சிலிர்ப்படைய செய்யும்
தென்றல் தான் அவள் !
பெருமையாய் பேசினாலும்  
பொறாமை தான் !
நான்  மட்டுமே 
நேசித்து சிலாகிக்கும் 
என்னவளின் 
சுவாசத்தையும் 
அபகரக்கிறாளே!!

என்னவள் நேசம் மட்டுமில்லை
ஸ்வாசுமமும் எனக்கு மட்டுமே !

Thursday 22 December 2016

கனவுகளின் காதலி !!

அவளின் 
தனிமை தேடலில் ,
அவன் மட்டுமே ! 
குறிகிய காலத்தில் 
அவளின் மனதை 
கலைத்தவன்,
அவன் மட்டுமே !
மணக்கோலத்தில் கனவுகள் 
மனம் முழுதும், 
அவன் மட்டுமே !
சுயநலம் தான் அவளுக்கு 
கைம்பெண் ஆனபின்பும்,
காதல் வயப்படுவதற்கு !
நிராகரிப்பென்னும் முடிவை 
முதலே அறிந்தும்!
விதி யாரை விட்டது!
விருப்பமில்லா வாழ்க்கை,
வஞ்சகமுள்ள வசைகள்,
வலிகளுடன் புன்னகைப் போர்,
வீண் பழிகளுக்கு நடுவே  
சதியே இருந்திருக்கலாமோ ?

சதி-  Old Hindu Funeral Practice 
கைம்பெண் - Widow

இதயம் !

கண்மூடிய பின் 
கனவிலும் நீ!
கண்விழித்த பின் 
நடந்தேறும் நாடகத்திலும் நீ! 
கனவுகளில் கரைந்த நீ, 
நிஜத்தில் மறைய மறுக்கிறாய்,
இதயத்தில் நிறைந்ததாலோ என்னவோ ?

நிறுத்த முடியாதது
நம் காணும் கனவுகளை !
அதற்கு உரிமை கோர எவரும் வாரா!

Tuesday 20 December 2016

அம்மா!

அம்மா
ஒற்றை வார்த்தையே 
               கவிதை தான் !
விவரிக்க முடியா 
               அற்புதம் நீ!
நித்தம் எங்கள் வாழ்வில் 
வண்ணம் தீட்டும் 
              வானவில் நீ !
உன் அருகில் இல்லாமை
             ஒன்றே குறை, 
அதையும் தீர்ப்பாய் 
            மணிக்கொரு  முறை 
உன் அழைப்பால்!
நாங்கள் உதாசீன படுத்தினாலும் ,
உன் முகத்தில் 
           புன்னகை மட்டுமே! 
அது நீ பிறந்த நாளான 
இன்று மட்டுமல்ல 
என்றுமே தவழ 
விழையும் உன் உயிர்நாடிகள் !



உனக்குள் உயிராய் வந்த நாங்கள்,
உனக்காக என்றுமே  உயிராய் இருப்போம் !

Thursday 15 December 2016

காதலா !


காலங்கள் கடந்தாலும்
காதல் கரையாது 
கவனிப்பாரற்று கிடந்தாலும் கூட !


சலனமில்லா வாழ்க்கையில் 
சரீரங்கள் காணாத 
மழைச்சாரலை போல் 
வந்த அவன்  !
அவள் சிந்தனைகளை 
சிறகடிக்க வைத்த அவன்  !
அவள் ஸ்பரிசத்தை 
சிலிர்க்க வைத்த அவன்   !
அவள் சோகங்களையும் 
சிரிப்பாக்கிய அவன்  !
சென்று விட்டான் !
இன்று அவளுடனில்லை !
சல்லாபிப்பதும் இல்லை !
சந்திப்பதும் இல்லை !
விலகிவிட்டான் !
விதியினால் விலகினானோ?
விருப்பப்பட்டானோ ? 
எவரும்  அறியவில்லை !
அவன் விலகினாலும்,
அவன் தூவிய விதை 
அவள் மனதிலிருந்து நீங்காது ! 

Friday 2 December 2016

சந்திப்பு !

முற்று பெறாத 
அரைப்புள்ளி போல, 
முற்றிலும் எதிர்பார்க்காத 
முதல் சந்திப்பு !
முந்தய பயணங்களை தவிர்த்து,
மாறுபட்ட எண்ணங்களுடன் 
முதல் பயணம் !
மனம் முழுதும்
அவளைக் கண்ட தருணம்,
நித்தம் மனதில் ஓடுகிற
அந்த நிமிடங்கள் ! 
என்றும் மறவேன் பெண்னே!
தனிமை தாசனாகிய என்னை  
உன் வசம் ஆக்கியதற்கு நன்றி !


சிலரின் சந்திப்பு 
மனதிற்கு பாதிப்பு தான் !
சஞ்சலமில்லா மனங்களின் 
சந்திப்பு என்றும் இனிமையே !