Sunday 29 March 2015

கவிதையே!!

கரைந்த காதலில் 

காதலன் !

காகிதமா,
என் காதல் உனக்கு  !
கண் முன்னே, 
கடந்து செல்லும் நீ 
கவிழ்ந்த முகத்துடன், 
செல்கிறாயே ஏன் ?
கதைகள் பேசி, 
கழிந்த காலங்கள், 
கலங்கடிக்குது என்னை !
கரைகிறது என் மனம்,  
கண்மூடித்தனமான
உன்  நினைவுகளால் !
உறையுது என் இதயம், 
உயிரற்று போன 
உன் நேசத்தைக் கண்டு !
கேள்வி கேட்க ஏதுவில்லை!
கேட்பாரற்று மூர்ச்சையானது 
என்னுடைய காதல், 
இன்று கசியும் என் கண்ணீரில், 
கவிதையாய் மட்டும் நீ!

Thursday 19 March 2015

பழைய காலம்!


என்றோ எழுதியது, 
இன்றைய பதிவு !

சிலரின் தாக்கம் என்றுமிருக்கும் 

என்பதன் எடுத்துக்காட்டு !


இதமான காற்றின் தாக்கத்தில்,
இன்பமான ஊர்தி பயணம், 
இல்லம் நோக்கி !
பக்கத்துக்கு இருக்கையில், 
பல் போன பாட்டி!
பழைய காலம் வேறு, 
பயத்தில் பேசுவதை தவிர்த்தேன் !
இடைவேளை நிறுத்தம்தான் ,
எங்களின் இணைப்பு !
அன்னியோன்யமான அன்பு ,
அந்நியராயிருந்தாலும்!
உரிமையுடன் உபசரிப்பு ,
அந்த சிறு இருக்கையிலும் கூட !
கண்டு வியந்தேன் !
என்னை எண்ணி மனம் குறுகினேன் !
வார்த்தைக்கு வார்த்தை ,
கடவுள் ஆசிர்வாதம் இருக்கட்டும் !
பழைய மனிதர்கள் 
வயதில் மட்டுமல்ல ,
மனதிலும் சரி ,
குணத்திலும் சரி,
பண்பிலும் சரி ,
நாகரீக மோகத்தில் ,
பழசை மறக்காதவர்கள் !
மற்றவரின் மரியாதையும் மறக்காதவர்கள் !

Monday 9 March 2015

தவிப்பு !!!


காதல் 
கரையும் ஒரு திரவியம் !
வார்த்தைகள் தேவையில்லை 
மௌனம் போதும் !



என் கனவில் நீ,
கரையும் நினைவுகளில் நீ! 
கசியும் கண்ணீரில்  நீ,
சிதறும் எண்ணங்களிலும் நீ! 
நேற்றைய பொழுது நீ, 
நாளைய காலையும் நீ! 
நிஜத்தின் பிம்பம் நீ,
என் நெஞ்சத்திலும் நீ !
கலைந்த காதலிலும் நீ
காணும் நாளையிலும் நீ  !
என் நிமிடங்கள் 
உன் நினைவுகளில் !
நிலையறிந்து 
என்று வாராயோ ?

Thursday 5 March 2015

அவளுக்காக !!!

துள்ளி திரிந்தவளே,
என் உள்ளம் கவர்ந்தவளே !
உனக்காக இக்கவிதை !



மாலை வேளை,

மயங்கும் சூரியன்,
மதி மயக்கும் என்னவளைக் கண்டேன் !
அவள் சென்ற வழி, 
மனம் சென்றது !
அவளை எண்ணி, 
நேரம் கழிந்தது !
தமிழன் மரபு இதுவில்லை தான் , 
தனிமையின் மரபு வேறல்லவே !
தவிர்க்க முடியாமல், 
அவள் குடிலின் மதில் மேல் நான் !
என்னை கண்டு அவள் மிரள, ,
அவளை கண்டு நான் மலைக்க, 
மிரண்ட அவளை நான் தாங்க,
அரங்கேறியது நாடகம் 
இருவரின் விழிகளுக்கிடயே ! 
நேரம் கடந்தது!
பிடி தளர்ந்தது! 
பிடிப்பு அதிகமானது !!!
அறிமுகமில்லா சந்திப்பு, 
அந்தம் வரையிலான உறவென்பதை
சொல்லாமல் சொல்லியது, 
அவளின் வெட்கம் !!