Thursday 29 December 2016

உனக்காக !

உனக்காக வாழு!
உன் ஆசைகளுக்காக வாழு!
உன்னை விட
உன் ஆசைகளை அடைய,
உரிமை கொண்டாட, 
ஒருவரும் இல்லை ! 
உன் மனம் சொல்வதை,
கேட்காதே !
உன் புத்தி சொல்வதை, 
கேள் !
மனம் அலைபாயும் !
புத்தி அலைக்கழிக்கும் !
மனதை கட்டுப்படுத்தும் !
ஆற்றலைக் வெளிக்கொணரும் !
நீ ஏங்கும் இடத்தை 
அடையலாம் 
உன் முயற்சி இருந்தால் !

லட்சியம் 
காதல் 
நட்பு
தன்னம்பிக்கை
சந்தோஷம்
இப்படி பல இருக்கிறது வாழ்க்கையில்! 
இந்த நொடி மட்டுமே நிஜம் !
நிரந்தரமற்ற வாழ்க்கையில் 
முயற்சிகள் தேவை உனக்கு பிடித்ததை அடைய !

P.S: என் பெட்டகத்திலிருந்து !

Monday 26 December 2016

கண்கள்!

காந்தம் தானடி
உன் கண்கள் !
கவலை மறந்தேனடி 
உன் இருப்பில் !
காதல் வயப்பட்டேனடி
உன் வசீகரிப்பில்!
கவிஞனும் ஆனேனடி
காதலி உன் விழியால் 
என் உலகை ரசிப்பதால் !


கண்கள் 
கருமேகங்கள் 
கவிழ்ந்துவிட்டேன்
காதலி கண்சிமிட்டியவுடன் !!



P.S: Written as per request.

Sunday 25 December 2016

தென்றல்!

என்னவளின்
கேசத்தை வருடுபவள்,
தாயைப் போல !
தேகத்தை தேற்றுபவள்,
தோழியைப் போல !
உரிமையோடு இருப்பவள் ,
உருவமற்றவள்!
நாளும் இருப்பவள்,
நாடோடி அவள் !
யார் அவள் ? 
மிருதுவான இசையில் 
மனதை மஞ்சமாக்கி 
சிலிர்ப்படைய செய்யும்
தென்றல் தான் அவள் !
பெருமையாய் பேசினாலும்  
பொறாமை தான் !
நான்  மட்டுமே 
நேசித்து சிலாகிக்கும் 
என்னவளின் 
சுவாசத்தையும் 
அபகரக்கிறாளே!!

என்னவள் நேசம் மட்டுமில்லை
ஸ்வாசுமமும் எனக்கு மட்டுமே !

Thursday 22 December 2016

கனவுகளின் காதலி !!

அவளின் 
தனிமை தேடலில் ,
அவன் மட்டுமே ! 
குறிகிய காலத்தில் 
அவளின் மனதை 
கலைத்தவன்,
அவன் மட்டுமே !
மணக்கோலத்தில் கனவுகள் 
மனம் முழுதும், 
அவன் மட்டுமே !
சுயநலம் தான் அவளுக்கு 
கைம்பெண் ஆனபின்பும்,
காதல் வயப்படுவதற்கு !
நிராகரிப்பென்னும் முடிவை 
முதலே அறிந்தும்!
விதி யாரை விட்டது!
விருப்பமில்லா வாழ்க்கை,
வஞ்சகமுள்ள வசைகள்,
வலிகளுடன் புன்னகைப் போர்,
வீண் பழிகளுக்கு நடுவே  
சதியே இருந்திருக்கலாமோ ?

சதி-  Old Hindu Funeral Practice 
கைம்பெண் - Widow

இதயம் !

கண்மூடிய பின் 
கனவிலும் நீ!
கண்விழித்த பின் 
நடந்தேறும் நாடகத்திலும் நீ! 
கனவுகளில் கரைந்த நீ, 
நிஜத்தில் மறைய மறுக்கிறாய்,
இதயத்தில் நிறைந்ததாலோ என்னவோ ?

நிறுத்த முடியாதது
நம் காணும் கனவுகளை !
அதற்கு உரிமை கோர எவரும் வாரா!

Tuesday 20 December 2016

அம்மா!

அம்மா
ஒற்றை வார்த்தையே 
               கவிதை தான் !
விவரிக்க முடியா 
               அற்புதம் நீ!
நித்தம் எங்கள் வாழ்வில் 
வண்ணம் தீட்டும் 
              வானவில் நீ !
உன் அருகில் இல்லாமை
             ஒன்றே குறை, 
அதையும் தீர்ப்பாய் 
            மணிக்கொரு  முறை 
உன் அழைப்பால்!
நாங்கள் உதாசீன படுத்தினாலும் ,
உன் முகத்தில் 
           புன்னகை மட்டுமே! 
அது நீ பிறந்த நாளான 
இன்று மட்டுமல்ல 
என்றுமே தவழ 
விழையும் உன் உயிர்நாடிகள் !



உனக்குள் உயிராய் வந்த நாங்கள்,
உனக்காக என்றுமே  உயிராய் இருப்போம் !

Thursday 15 December 2016

காதலா !


காலங்கள் கடந்தாலும்
காதல் கரையாது 
கவனிப்பாரற்று கிடந்தாலும் கூட !


சலனமில்லா வாழ்க்கையில் 
சரீரங்கள் காணாத 
மழைச்சாரலை போல் 
வந்த அவன்  !
அவள் சிந்தனைகளை 
சிறகடிக்க வைத்த அவன்  !
அவள் ஸ்பரிசத்தை 
சிலிர்க்க வைத்த அவன்   !
அவள் சோகங்களையும் 
சிரிப்பாக்கிய அவன்  !
சென்று விட்டான் !
இன்று அவளுடனில்லை !
சல்லாபிப்பதும் இல்லை !
சந்திப்பதும் இல்லை !
விலகிவிட்டான் !
விதியினால் விலகினானோ?
விருப்பப்பட்டானோ ? 
எவரும்  அறியவில்லை !
அவன் விலகினாலும்,
அவன் தூவிய விதை 
அவள் மனதிலிருந்து நீங்காது ! 

Friday 2 December 2016

சந்திப்பு !

முற்று பெறாத 
அரைப்புள்ளி போல, 
முற்றிலும் எதிர்பார்க்காத 
முதல் சந்திப்பு !
முந்தய பயணங்களை தவிர்த்து,
மாறுபட்ட எண்ணங்களுடன் 
முதல் பயணம் !
மனம் முழுதும்
அவளைக் கண்ட தருணம்,
நித்தம் மனதில் ஓடுகிற
அந்த நிமிடங்கள் ! 
என்றும் மறவேன் பெண்னே!
தனிமை தாசனாகிய என்னை  
உன் வசம் ஆக்கியதற்கு நன்றி !


சிலரின் சந்திப்பு 
மனதிற்கு பாதிப்பு தான் !
சஞ்சலமில்லா மனங்களின் 
சந்திப்பு என்றும் இனிமையே !

Wednesday 30 November 2016

தேவதை !

என்ன தான் 
மடிக்கணினியில் 
ஓயாமல் வேலை பார்த்தாலும் !!!
என் அம்மாவின் 
மடியில் படுத்து
அவர்களின் 
ஆசைகளை,
புலம்பல்களை, 
ரகசியங்களை , 
கேட்பதின் சுகம்
எதற்கும் ஈடாகாது !

அம்மா 
ஒற்றை வார்த்தை போதும் 
என் மனம் முழுதும் நிறைந்த ஒரே தேவதை !
ஜென்மங்கள் பல கடந்தாலும் 
நீ மட்டும் வேண்டும் என் தாயாக !
உன் உயிரில் வந்த நான்  !
உனக்காக உயிரையும் தருவேன் நான் !

Friday 25 November 2016

அறிமுகம் !

சிலர் பலர் 
நிறைய மக்கள் உண்டு இந்த வகையில் !
என்னை பொறுத்த மட்டில் 
வாழ்க்கை ஒரு வட்டம் , 
முற்று பெறாதது இறந்த பின்னும் சரி !
சந்திக்கும் மனிதர்கள் ஆயிரம் ,
அனைவர்க்கும் பின்னே சோகங்களுண்டு !
யாருக்குத்தான் இல்லை :)
சிரத்தையெடுத்து சிரிக்க வேண்டும் !
பாகுபாடில்லாமல் பழக வேண்டும் !
இந்த நொடியில் 
முடியும் வாழ்க்கை ! 
வெறுக்காதே எவரையும்,
நேசிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை !



சிலரின் பெயர்
போதும்
அவளின் முகம் 
பிரகாசமாக ! 
சிலரின் அறிமுகம் 
போதும் 
அவளின் மனம்
விசாலமாக !
சிலரின் நிழல் 
போதும் 
அவளின் நினைவுகள் 
கரைய !

Friday 18 November 2016

நிழற்குடை !

உன்னுடன் இருக்கும் நிமிடங்கள்
என் நாடித்துப்பில் 
பதியும் நிஜங்கள் பெண்னே !


நீ இருக்கும் இந்த நிமிடம் 
நிஜம் பொய்த்து போகிறது!
நீ பேசும் இந்த நிமிடம் 
இரைச்சல்களும் இனிமையாகிறது !
நீ நடக்கும் இந்த நிமிடம் 
நடமாட்டமும் ஸ்தம்பிக்கிறது ! 
நீ சிரிக்கும் நிமிடமோ 
சிந்தனைகள் சிதறல்களாகிறது !
உன்னை அறியாமல் 
நீ எனக்கு தரும் நிமிடங்கள் 
போதும் பெண்னே 
நிழல் தேடும் நம் நினைவுகளுக்கு !

Monday 14 November 2016

நீ போதுமடி !!

கண்முன்னே தெரிவதெல்லாம் 
நிஜமல்ல பெண்னே 
கண்ணிமைக்கும் நொடியில் 
காகிதத்தில் அச்சாகும் 
காலமிது !
காளன் கூட 
காதலனாகிவிட்டான் 
மானிடர்களுக்கு !
மனிதர்கள் மதிமயங்கி 
நன்றி பாராமல்,
மனித நேயம் பாராமல் ,
இருப்பதினாலோ ,
அறியேன் !
அதனால் பெண்ணே ,
காலம் சிறிது  !
மன்னித்து பழகு !
மரணித்த பின் அழாதே!
உன் மடியில் படுத்துறங்க 
ஆசை இல்லையடி எனக்கு !
உன் மறுபேச்சு போதுமடி 
இப்பிறவியில் எனக்கு !

மனிதர்களை மதிக்க வேண்டும் 
அதற்கும் மேலாக அவர்களும் உணர்வுகளை !
உருவத்தினாலோ பணத்தினாலோ 
உடையினாலோ எதனாலும் 
எவரையும் எடை போடாதீர்கள் !
மனம் அனைவர்க்கும் சமம் !
வெறுத்தால் விலகி விடுங்கள் !
வறுத்தாதீர்கள் :)
எவருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் 
உங்கள் வாழ்க்கையை !!

Saturday 12 November 2016

உறுதுணை!

தனிமை தவிப்புகள் 
தியாகத்தினாலும் வரலாம் 
திடமில்லா மனதினாலும் வரலாம்  
கடந்து வந்த பாதை 
கடினமோ களிப்போ
கழித்துவிடு!
கண் சிமிட்டும் இந்நொடியை
எண்ணிக் கொள்! 
கனவோ நினைவோ 
கண் முன்னே நடக்கும் 
நிஜம் இதுவே !
அதை காணும் உன் உயிர் 
மட்டுமே உனக்கு உறுதுணை !
உன் உடலும் தான் !

கவலைகளை தவிர்த்து உன்னை காதலி!
காலம் உன்னை காதலிக்கும் !

Wednesday 12 October 2016

தேடல் !

தேடல் இல்லா வாழ்க்கை வீண் !
ஊடல் இல்லா வாழ்க்கையும் தான் !

தனிமையில்
துயரங்களை மட்டும் 
தூக்கிக் கொண்டு 
தவிக்கும் பொது தான்
தேவையின் 
தேடல் துரத்தும் 
திருத்த முயன்ற 
நட்பை நோக்கி !

காதல்!

மனிதர்கள் ஆறு அறிவு படைத்தவர்கள் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பிறருக்கு பிடித்த செயலை செய்ய விட்டாலும் பரவாயில்லை , வருத்தப்பட வைக்க மாட்டார்கள். மிருகம் போல் அல்லாமல் அவர்களுக்கு வாய்ப்புகள் ஜாஸ்தி எண்ணங்களையும் வெளிப்படுத்த வழிகளும் அதிகம் !

கண்ணால் காண்பதெல்லாம் மெய்யல்ல !
உணர்ந்தவனுக்கு மட்டுமே தெரியும் 
காதல் என்பது அறிவுரையால் வருவதல்ல !
கசிந்துருகும் பாசத்தால் வருவது !

இக்காலத்தில் மற்றவரின் வாழ்க்கை பிறருக்கு என்றுமே கேளிக்கை பேச்சு தான் ! 
ஒரு பெண்ணின் மனதோ ஆணின் மனதோ புரிதலில் தான் அறியும் வாழ்க்கையை !
கண்மணி என்பதால் வராது, காயம் பல தந்து விட்டு! 

புரியவில்லை எனக்கும் 
பிடிக்கவில்லை ஏதும் !

Monday 19 September 2016

அளவுக்கு மிஞ்சினால்!!!

அளவுக்கு மிஞ்சினால் ,
அமிர்தமும் நஞ்சு
அது போல தான் 
உறவுகளும் 
ஏன்? 
நட்புகளும் !

எவரிடமும் எதிர்பார்க்காமல் இருந்தாலே போதும் !
அதே போல் அளவோடு பழகுதல் வேண்டும் !
நம்மால் அறிய இயலாது அவர்களின் மன ஓட்டத்தை ! 
விளையாட்டாக பேச போகி விபரதீதத்தில் முடியும் ! 
நம்பியவர்கள் கழுத்தறுக்கும் காலம் !
நயவஞ்சகர்கள் மனதை காயப்படுத்தும் நேரம்  !
கவலைப்படாதே பெண்னே !
தனிமையைக் காதலி !
தாவிக் குதித்தெழு !
துள்ளி விளையாடு !
துவண்டு விடாதே !

Wednesday 7 September 2016

மறுபடியும் ஒரு இடைவெளி. 

நிரம்பும் பக்கங்கள்
நகரும் நாட்களில் !
நித்தம் ஒரு அனுபவம்
நெஞ்சில் குதூகலம் !
நிகழ்வுகளில் தான்
நிஜத்தை அறிய முடியும் !
நேரில் கண்டதெல்லாம்
நேர்மையின் வெளிப்பாடல்ல !
பயணிப்பவர்க்கு தான் உரிமையுண்டு
விமர்சிக்கவும் , உபசரிக்கவும் !

பயணிப்போம் இனிமேலாவது !
இடைவெளி இல்லாமல் .

Saturday 19 March 2016

புதிய துவக்கம் !

ஆயிரம் வேலைகள் ,
ஆயிரமாயிரம் சிந்தனைகள் ,
சில கால பனிப்
        போருக்குப் பின்,
திறக்கிறாள் அவள்
        விதைத்த தளத்தை,
அவள் எண்ணங்களால்
நிரம்பும் பக்கங்களை,
அவள் வாய் நுனியில்,
காத்திருக்கும் வார்த்தைகளை
கோர்க்க ஆரம்பித்தாள்,
புதிய அத்தியாயத்தை எழுத !