Saturday 1 November 2014

ஹைக்கூ -1!

பல நாட்களுக்கு பிறகு ,
மனதின் சிறு பிரதிபலிப்பு !!!



நேரங்களில் 
சிரிக்கும் சமாச்சாரமும் 
சினங்கொள்ள செய்யும் 
சிந்தனைகள் 
சிதறும் போது!!

Wednesday 8 October 2014

எண்ணங்கள் !!

வேலை இருந்தால் நேரமும் மிச்சமில்லை 
நித்திரையும் வரவில்லை !
வலை பதிவிற்கும் வஞ்சனை பார்க்க வேண்டி உள்ளது !

பணம் மட்டுமே இருந்தால் 
பத்து பத்திரம் கூட
படுக்கையில் இருக்கும் பெற்றவர்களுக்கு 
பணிவிடை செய்து விடும் 
என இருக்கும் மனிதர்களுக்காக !!


அந்த பார்வையில் 
ஏக்கமோ,
ஏமாற்றமோ, 
எண்ணிப் பார்க்க முடியவில்லை !
ஆர்வமோ ,
ஆதங்கமோ, 
அறிய முடியவில்லை !
வறுமையிலும், 
வயதிலும், 
வறண்டு போன மனம், 
வருவாயை எதிர்பார்க்கவில்லை, 
வஞ்சனையில்லா பாசம் மட்டுமே !!!




Friday 19 September 2014

எதிர்பார்ப்புகள்!!ஏமாற்றங்கள் !!

பல நாட்களுக்கு பிறகு 
புது வலை பதிவு !
யோசித்தவுடன் எதுவும் பிடிபடவில்லை!
ஏமாற்றமே !
அது தான் எதிர்பார்ப்பின் விளைவு !
சில நேரங்கள்
பல நேரம் தொகுப்புகளாகும் !
சில ஏமாற்றங்கள் 
பல நேரம் எதிர்பார்ப்புகளை குறைக்கும் !!

எதிர்பார்ப்புகள், 
எந்நேரமும் பூர்த்தியாவதில்லை !!
எதிர்பாராமல் இருக்கப்போவதுமில்லை !!
ஏற்ற இறக்கங்களும் இல்லாமலில்லை !
ஏக்கத்திற்கும்  பஞ்சமில்லை !
எதுவுமில்லாமல் ஓட்டமுமில்லை!
யாதுமாகி நிற்காமல்,
ஏங்கும் இதயத்திற்கு தீனி ,
ஏமாற்றமில்லா  வாழ்க்கையே !!! 



P.S: தவறுகளுக்கு மன்னிக்கவும் !!

Thursday 4 September 2014

நேரங்கள் !

நட்போ,
ஒரு உறவோ 
எதுவுமே தடங்கல் இல்லாமல் 
அருவி போல் ஒரே மாதிரி செல்ல,
நம் முனைப்பும் அவசியம் !
மற்றவர்களுக்கு முக்கியத்துவமும் அவசியம் !


வீட்டை அடைக்க 
கதவிருக்கும் போது?
என் மனதை அடைக்க 
ஒரு ஜன்னலாவது வேண்டாமோ ? 
உன் குறுஞ்செய்திக்காக,
என் சிறு உள்ளம் ஏங்கிய நேரங்கள் பல !
உன் முகம் காண,
நான் தியாகம் செய்த நிமிடங்கள் பல !
உனக்காகவென்று உருகிய நாட்கள் தான் 
மிச்சமே தவிர,
எனக்கே எனக்கான வேளையில்
என் வேலையைத் தவிர,
கவலையுடன் உன்னை எண்ணி நான்! 
துள்ளி திரியும் வேளையில் 
நிமிர கூட நேரமில்லாமல் 
நகராமல் உன் நினைப்புடன் நான் !
இளமை பிராயத்தின் இன்பமே 
இணைபிரியா தோழிகளுடன் 
இன்முகமாய் இருப்பது தான் !
அருகாமையில் இல்லாதவரை எண்ணி 
இடைவெளியில் இருப்பது அல்ல !
ஒருவரின் அருமை 
பிரிவில் அறிய முடியும் !
நட்பென்பது வரம் 
நேரம் ஒதுக்கு !

Thursday 21 August 2014

கனவுகள் !!

நேசிப்பவர்கள் கூட 
நசுக்கி விடுவார்கள் (சில நேரங்களில்)  நம் மனதை 
நாம் தோற்று விட்டால் !
சகிப்பு தன்மை இருந்தால் மட்டுமே 
சாதிக்க முடியும் !
கலாம் சொன்னது போல் ,
பெரும் கனவு காண்பவர்களும் பெரும் கனவுகள் எப்போதும் அப்பாற்பட்டதாகும்!

கனவு காணுங்கள் நினைவாகும் வரை !

வாழ்கையில் விருப்பங்களில்லால்
ஒருவருமில்லை !
அதுபோல் தான் நானும் !
என் கனவுகளை
நீ விரும்பாமல் இருக்கலாம் !
ஆனால்,
வீசச் சொல்லாதே !
கனவுகள்  காகிதமல்ல,
கசக்கி  எறிவதற்கு   !
காய்ந்து  போன,
மனதின்  குமுறல்கள்  !
சரிந்து  போன,
சரிதத்தின்  சத்தியங்கள்  !
வறண்டு போன,
வாழ்வின்  வினைகள்  !
நகர்ந்து  போன,
நாட்களின்  நினைவுகள் !
நேற்றைய  பொழுது
எனக்கு  கைவிரித்தாலும்,
நாளைய  விடியல்
வழி  காட்டும்,
என்  வாழ்க்கைக்கும்  சரி  !
என்  கனவுகளுக்கும்  சரி  !

Tuesday 19 August 2014

புகைப்படம்!!!

இன்றுடன் 175 வது ஆண்டு ஆகியது புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு !
விஞ்ஞான வளர்ச்சியில் 
பல மாற்றங்கள் உலகம் கண்டாலும் 
பழையதை நினைத்தால் என்றுமே 
பரவசம் தான் !!
அதற்காக என் சிறு அர்ப்பணம் !!

படங்கள் பார்ப்பதுக்கு மட்டுமல்ல,
பதிவு செய்வதற்கும் தான் !
பால் நிலவை சுற்றி மறைத்துக் கொள்ளும் 
நட்சத்திரங்கள் போல், 
பதிய மறுத்த நினைவுகள் கூட 
புரட்டும் பொழுது,
புல்சிலிர்க்க வைக்கும் 
               புகைப்படங்கள் மூலம் !


Sunday 17 August 2014

நட்புக்காக !!

நண்பர்கள் தினத்தன்று பதிவு செய்ய வேண்டியது !
பழமொழி சொல்வதை போல் 
எவ்வளவு நண்பர்கள் இருப்பது பெரிதல்ல 
எவ்வளவு பேர் வருவார்கள் ஆபத்து என்றால்!
அங்கே தான் தெரியும் நம் நட்பின் ஆழம் எவ்வளவு என்று !
ஆச்சர்யமல்ல மாறி வரும் சுற்றத்தில் 
மனிதர்கள் மாறுவதும் இயல்புதானே? 

அழகான நாட்கள் 
ஆழமான நட்புடன் 
இனிமையான பொழுதுகள் 
ஈரமான மனதுடன் 
உரிமையான சண்டைகள் 
ஊஞ்சலாடிய கனவுகள் 
ஐயமில்லா ஒற்றுமை
எண்ணிலடங்கா நினைவுகள் 
ஏமாற்றமான தருணங்கள் 
ஒருமையான உறவுகள் 
ஓசையில்ல அழுகைகள் 
ஔவை உரைத்த கல்வியுடன் 
கலந்து போன நட்பினை 
எது வந்தாலும் பிரிக்க இயலாது 
காற்றில் கலந்த நீரைப்  போல !!

Monday 11 August 2014

என் உயிர் -தம்பி !

நேற்று எழுதவேண்டியது !
அவசரத்தில் எழுதிகிறேன் 
தினமும் எழுதுவேன் 
என் தம்பியின் பாசத்தை !
நேற்று மட்டுமல்ல
என்றுமே ரக்ஷாபந்தன் தான் !!

உன் வருகையில்
நான் திளைத்தேன்! 
உன் சிரிப்பில் 
நான் நெகிழ்ந்தேன்! 
உன் பரிவில் 
நான் வியந்தேன் !
ஆச்சர்யம் தான் !
அடித்து கொள்ளும் வயதில் 
நீ விட்டுகொடுப்பதைக் கண்டு !
என் தலையசைவில்,
உன் முடிவுகள் !
என் சொல்வேன் !
வார்த்தைகள் போதாது, 
நம் நேசத்தை விவரிக்க !!
எத்துனை ஜென்மங்களானாலும்,
என் தம்பி நீ யாக வேண்டும் !!
பிரார்த்தனை தேவையில்லை,

நம் பாசம் நம்மை சேர்க்கும்!!



Saturday 26 July 2014

தனிமை!

தனிமை சிந்தனை கடலில் 
தேவைகளை தேடலாம் !
தனியாக இருப்பதும் ஒரு சுகம் !
மனமறிய கிடைக்கும் ஒரு வாய்ப்பு!
வருத்தம் வேண்டாம் !
செயலில் வெளிப்படுத்தலாம் !

தனிமை 
மரணத்தை விட 
கொடுமையானதா?
இல்லை 
தவத்தை விட 
சிறந்ததா? 
தனிமை ,
தேடல்களை அதிகரித்து, 
தன்னிலை உணர்ந்து ,
தன்மனதை திடமாக்கும் 
ஒரு திரவியம் !!


Tuesday 22 July 2014

பயணம் !!

நாட்கள் சென்றாலும் 
நட்பு தொலைந்தாலும் 
நினைவுகள் நெருடும் 
நேசம் இருக்கும் வரை!
பயணம் முடியும் வரை !

எதிர்பார்ப்புகளுடன் 
என் கலகத்துக்காக
காத்திருந்தேன் !
கிடைத்தது 
ஜன்னலோர இருக்கை!
நீண்ட தூர பயணக் களிப்பு ,
கம்பிகளின் நடுவே 
கலர் கலராய் கனவுகள், 
கோர்ந்தன கிரகத்தை சுற்றும் கோள்களுடன்,
கற்பனை காற்றில் 
மிதந்தேன் துணையை நோக்கி ,
களவாடிய நேரங்கள்,
கரைந்தன,
காண நேரத்தில் !
தண்ணீரால் அல்ல 
கண்ணீரால் !




Sunday 20 July 2014

உணர்வுகள்!!!

உலகம் - பல கலாச்சாரங்கள் 
நிறைந்த ஒரு பழரசம் என்று சொல்லலாம் !
மனிதனின் எண்ணங்களும் அது போல் தான் !
தெளிவான நீரோடை போல் எண்ணங்கள் என்றும் இரா!!
அனைத்தும் அவனவன் மனம் போல் தான் !
எதுவும் நிரந்தரமில்லாதது !

சில உணர்வுகளில், 
உன்னதத்தை அறிகிறோம்!
சில உன்னதங்களில், 
உரிமைகளை அறிகிறோம்!
சில உரிமைகளில், 
உறவுகளை அறிகிறோம், 
சில உறவுகளில், 
உலகினை அறிகிறோம் !!




Saturday 12 July 2014

தன்னம்பிக்கை !!

சிறு இடைவெளிக்கு பிறகு 
என் சிறிய பதிப்பு 
தன்னம்பிக்கை இழந்தவன் 
தும்பிக்கை இழந்த யானை போல் . 
தவறு செய்வது இயல்பு 
திருத்தி கொள்வது இயற்கை 
அது போல் தான் 
காலம் யாரையும் மாற்றும் .. 
நம்பிக்கை வைக்கலாம் 
கடுகளவு போதுமே !!!


துயரம் யாருக்குத் தான் இல்ல
மாட்டிற்கும்  இருக்கிறது 
வெட்டுகிறார்கள் என்று... 
மனிதனுக்கும்  இருக்கிறது 
விட்டுப்போகிறார்கள் என்று.. 
துவண்டபோது யாரும் வரவில்லை..
தூக்கி நிறுத்தவும் யாரும் வரப்போவதில்லை... 
யாரையும் நம்பாதே 
உன் தன்னம்பிக்கையை தவிர..
தன்னல்முள்ள ஜீவனாக மாறு,
தடைகளை தகர்த்தெறி, 
தீஞ்சுவாலை போல் 
விரைவாகள் முன்னேறு.. 
திசையெங்கும் உன் புகழ் பரவும்!
திகைத்துப் போவர்
 உன்னை இழிந்தவர்கள் !!

Thursday 26 June 2014

குடிமகன்

இல்லறம் இனிமையில் , 
மனம் மட்டும் ஒத்திருந்தால் போதாது 
பழக்கமும் மாற வேண்டும் !

பத்து பாத்திரம் தேய்த்து 
பெற்ற பிள்ளைகளை, 
பேணும் பேதை அவள், 
இல்லறத்தில் இன்பத்துக்கு பஞ்சமில்லை!
துணைவனும் தூர் வாருகிறான்,
துயரில்லாமல் காப்பாற்றுகிறான் !
வலி போக்கும் நிவாரிணி ,
வலிய வந்தது விளம்பரம் !
மலிவு விலையில் வந்த வினை , 
இல்லறத்தில் வேதனை !
விகல்பமில்லா ஒருவனின் ,
விதியின் சதியா
இல்லை 
மதியின் கதியா 
வீழ்ந்து கிடக்கிறான் !!!
வீதியில் தன்பதியை தவிக்கவிட்டு !!!

Wednesday 25 June 2014

அகதிகள் !

அகதிகள் தினத்திற்காக எழுதியது !!
பரந்த உலகில் 
அனைவருக்கும் இடமுண்டு !
சிலருக்கு சொந்த நிலம் !
பலருக்கு வந்தடைந்த நிலம் !
அவர்கள் தான் அகதிகள் !!

ஆறுதல் படுத்த இயலாது 
அதனால் என் அனுதாபங்கள் !!


தாலாட்டு  பாடும் 
தாயுடன்  வாழ்ந்த நாட்கள் போய்,
தலை  கோதும் 
தந்தையுடன்  இருந்த  நாட்கள்  போய்
சமரச  படுத்தும் 
தனயனுடன்  செலவிட்ட நாட்கள்  போய்
அருமை தோழிகளுடன் 
ஆடி பாடிய காலங்கள்  போய் 
அயராது உழைத்தாலும் 
துயரமில்லா கழிந்த நாட்கள் போய் 
அகத்துக்காரரின் அன்பால் 
சுற்றம் மறந்த நாட்கள் போய் 
அன்பு ! ஆசை !
பண்பு ! பண்பாடு ! பந்தம் !
எல்லாம் மறந்து போய் 
வீட்டை விட்டு ,
ஏன் நாட்டையே விட்டு ,,
வயிற்றுப் பிழைப்புக்காக, 
நாய் படாத பாடு படும் 
நான் மட்டும் தான் அகதியா,
இல்லை நீங்களுமா ?

Monday 23 June 2014

இழப்பின் வலி !!

நேரம் வந்தால் செல்லும் உயிர்
நீ அவசரத்தில் எடுக்கும் முடிவு 
உன் உயிரை பறிக்கலாம்!
ஆனால் உன் நினைவுகள் 
அடங்கா துயர் தரும் !
தனிமையை உணர்ந்தால் 
தாயிடம் கூறு !!
அவள் உணர்த்துவாள் 
உண்மையான அன்பை !!
தந்தையிடம் கூறு 
அவர் விவரிப்பார் 
வாழ்க்கையின் மகத்துவத்தை !!

தெரிந்தவர்களின் தற்கொலையின் பாதிப்பின் பதிப்பு இங்கே!!


பிறப்பின் வாசலில்
உன்னை வரவேற்க
பெருமிதத்துடன் உன் தந்தை,
எதிர்பார்ப்புடன் பந்துக்கள் ,
பிரார்த்தனையுடன்
உன் பிஞ்சு முகத்தை பார்க்க 
ஆனந்தக் கண்ணீருடன் உன் தாய் ,
பாரங்கள் பல இருந்தும்
உன்னை எண்ணிக்கொண்டு ,,
மனசெல்லாம் பூரிப்புடன்
உன் வளர்ச்சியை எண்ணி எண்ணி,
களிப்புடன் நீ விரும்பியவற்றை
வலி யை மட்டுமே கூலியாகக் கொடுத்து, ,
உன் விழியில் ஈரத்தை
 பார்க்கக் கூடாதென்றெண்ணும்
கடவுளுக்கு நிகரான
பெற்றவர்களை சிந்தித்து பார் ,
நீ விபரீத முடிவின்
  விளிம்பிலிருக்கும் பொழுது ,
காரணங்கள் பல கூறலாம்
வேலைப் பளு,
நண்பர்கள் பிரிவு,
காதல் முறிவு,
நீ சென்று விடுவாய் உலகை விட்டு,
உன்னை மரண வாசலுக்கு அனுப்பிவிட்டு
நிர்க்கதியாகி நித்தம்
உன் நினைவுகளுடன்,
நடைபிணமாய்
வாழப் போவது உன்னை பெற்றவர்கள் மட்டுமே !!

Saturday 21 June 2014

இசை!

தனிமையிலும் இனிமை காண முடியும் 
இசை இருந்தால் !!
மயக்கும் இசையில் 
நம் நிலை மறக்க செய்யும் 

இசைக்கான நாள் !!


காலையில் எழுப்பும் 
சுப்ரபாதத்திலிருந்து ,
கவலையில் வருடும் 
சோக கீதங்களிலிருந்து, 
காதலில் விழுந்ததும் 
கேட்கும் பாடல்களிருந்து,
கவலையில் மூழ்கியிருக்கும் 

சாவு வீடு வரை .
இசையின் ஆதிக்கமே !
பல வாத்தியங்களுடன் 
பத்து பாத்திரத்திலும் கூட 
சங்கீதத் திறனை வெளிப்படுத்தும் 
இசையமைப்பாளர்களுக்கு இந்நாள் அர்ப்பணம் !

Monday 16 June 2014

வரவு!!


நான் சுவாசிப்பதே 
உன்னை நேசிக்கத்தான் 
என்று காதல் மொழி பேசும் 
என்னவளின் ஏக்கமான 
வரிகள் !!

மழையின் வரவுக்காக
ஏங்கும்
நிலம் போல,
உன் வரவுக்காக
ஏங்கும்
என் விழிகளும்
வறண்டு கொண்டிருக்கிறது
எதிர்பார்ப்புகளை
கண்ணீரில் கரைத்து!
பூவரம்பின் வரவுக்காக
வாடும்
செடி  போல ,
என் மனமும்
வாடிக் கொண்டிருக்கிறது
நினைவுகளை
கனவுகளில்  சேர்த்து!
தென்றலின் வரவுக்காக
ஏங்கும்
சோலை போல,
என் இதயமும்
ஏங்கிக் கொண்டிருக்கிறது
நம் காதலை
உயிர்நாடியில் சுவாசித்து!!

Saturday 14 June 2014

தந்தை!!

வார்த்தைகளால் கூற முடியாது 
நம் பெற்றோரின் நேசத்தை !
தாயின் பாசம் பலவாறு வெளிப்படும் !
ஆனால் தந்தையின் பாசம்
நம் பரிமாணங்களில் வெளிப்படும் !!


அளவான பேச்சும், 
ஆரவாரமில்ல அனுசரணையும் ,
இயல்பான நடத்தையும், 
ஈகைப் பண்பும்,
உரிமையுடன் உதவும், 
ஊராரை விமர்சிக்காமலும், 
எழுச்சிமிகு எண்ணங்களும் ,
ஏச்சுகளை பேசாமலும்,
ஐக்கியம் வளர்த்தலும்,
ஒவ்வாமை தவிர்த்தலும், 
ஒக்கமாய் வளர்தலும்,
ஔவியம் தவிர்க்கவும்,
அஃரினைகளையும் மதிக்கவும் ,
கற்றுத் தந்த 
கடவுளான என் தந்தைக்கு, 
"தந்தையர் தின வாழ்த்துக்கள்"

Thursday 12 June 2014

குழந்தை தொழிலாளர்கள்!!


குழந்தையின் வருமானம் 
நாட்டுக்கு அவமானம் !(படித்ததில் பிடித்தது )
ஒரு பெண் குழந்தையின் 
ஆதங்கம் கீழே !!

என்  வரவை  எண்ணி 
நீ  காத்திருந்த   நேரங்கள் ,
என் முகம் பார்த்து 
நீ அழுத நிமிடங்கள்,
என் கரம் பிடித்து 
நீ கூட்டிச் சென்ற  நாட்கள் ,
என் மனம் முழுக்க 
நீ ஊட்டிய நம்பிக்கை ,
வறுமையிலும் ,
வசந்தத்தை காட்டினாய் !
வஞ்சனையில்லா அன்பினால்  
வாஞ்சை கொண்டேன் உன் மேல் !
சச்சரவில்லா வாழ்வில், 
நுழைந்தது விதி !
நீ வினையினால் படுத்த படுக்கையானாய் !
நானோ வீதியில் விளையாடாமல் ,
துணிகளை வெட்ட ஆரம்பித்தேன்,
வயதுக்கு வராமலே !


P.S:தவறு இருந்தால் கருத்துக்களில் பதிவு செய்யவும் !

Tuesday 10 June 2014

போராட்டம் !

வாழ்க்கை வருபவர்களுக்கெல்லாம் வசந்தமல்ல !!
வறுமையில் வாழ்பவர்க்கு, 
நித்தம் ஒரு போராட்டம் 
ஒரு வேலைகஞ்சிக்கு  
எப்படி பணம் சேர்ப்பதென்று  ?
செல்வத்தில் திளைப்பவரகளுக்கும்  
போராட்டம் தான் 
எப்படி பாதுகாப்பது ? 
எப்படி பெருக்குவது ?
இருப்பவர்களுக்கு ஒரு கவலை !
இல்லாதவர்களுக்கு ஒரு கவலை !


போராட்டமான வாழ்க்கையில்
போராளிகளாகிய நாம் சந்திக்கும்
போராட்டங்கள் ஆயிரம்
போராளிகள் பல்லாயிரம்
போட்டியைக் கண்டு முடங்கிவிடாதே
போராடு போட்டி போடு
பொறாமை கொள்ளாதே!
பக்குவமாய் செயல்பாடு
பதற்றம் அடையாதே!
சிந்தித்து செயல்படு
சினங்கொண்டு எறியாதே !!
மனதாரப்  பாராட்டு
மனதில் வைத்து பேசாதே !!
இயன்றவரை உதவி செய்
இயலாதவரை கேலி செய்யாதே !!
ஊக்கத்துடன் முன்னேறு
ஊதாரியாகத்  திரியாதே!!!
எண்ணங்கள் பல
திண்ணத்துடன் செயல்படு
வருங்காலத்தை
கேள்விக்குறி ஆகாதே
வர்ணங்கள் நிறைந்த
வானவில்லாக மாற்று!!!!!




P.S: என் அலமாரியிலிருந்து !!

Thursday 5 June 2014

சுற்றுச்சூழல்


உலக சுற்றுச்சூழல் தினத்திற்காக ,
தோன்றிய எண்ணங்கள் பல..
செயலாற்றுவது கடினம் ,
குறை கூறும் இவ்வுலகில் !
மாற்றங்கள் நம்மில் ஆரம்பிக்கட்டும் !


சுட்ட வெயிலின் அழுத்தத்தில் 
இளைப்பாற இடம் தேடினேன் 
சுற்றிலும் நெடு நெடுவென 
மரங்களா?
இல்லவே இல்லை !
காற்று கூட புகா
கட்டிடங்கள் தான் !!
சுவர் மட்டும் எழுப்பினால் போதுமா? 
சுவாசிக்க சந்திர மண்டலம் தான் போகவேண்டும் போல!
சமுதாயமே (என்னையும் சேர்த்து தான்)
நெகிழை (PLASTIC) ஒழித்துவிட்டு 
காகிதத்திற்கு வழிவிடுங்கள் !
வேகப்பத்தை(PIZZA) தவிர்த்துவிட்டு 
திணையை உண்ணுங்கள் !!
மகிழுந்தியை ஓரக்கட்டிவிட்டு 
மிதிவண்டியை ஓட்டுங்கள்!
செடிகள் நடுங்கள் !
சுற்றுப்புறத்தை பேணுங்கள் !

Tuesday 3 June 2014

மனிதநேயம்

இக்கவிதையின் ஆரம்பம், தாம்பரம் ரயில்நிலையத்தில் ஆரம்பித்தது !வருடங்கள் உருண்டோடினாலும்,பசியால் துடித்த மூதாட்டியை மறக்க இயலவில்லை !பசியென்று கதறிய ஜீவனை,கண்ணெடுத்தும் பார்க்கவில்லை எவரும் !எந்த கடையும் அருகில் இல்லை !பசிவேதனை எனக்கும் தான்,தேநீரும் தேவர்மிதமாகும்,பசியின் கோரப்பிடியில் சிக்கியவர்களுக்கு !!அன்று தான் உணர்ந்தேன் !!குல்லாவும் (winter )ஒரு பிஸ்கட் கட்டும் கொடுத்து வந்தேன் !மனம் நிறையவில்லை !பாரத்துடன் திரும்பி வந்தேன் !கடவுளின் படைப்பை எண்ணி !மனிதனுக்கு இதயம் உண்டு ஆனால்இயந்திரமயமானவர்களுக்கு  எங்கே இதயம் உள்ளது????



சாலையோரத்தில்
கீழேகிடக்கும்
கற்களைக் கண்டாலே
ஒதுங்குபவர்கள் ,
கலங்கி நிற்கும்
வாழ்விழந்த ஜீவன்களையா ,
இல்லை!
வலுவிழந்த மனங்களையா
கண்டுகொள்வார்கள் !!
இல்லவே இல்லை !
மனிதநேயம்
மனிதருள் மரத்துவிட்டது
மற்புதிரில் மறைந்திருக்கும்
கற்கள் போல ! 

Wednesday 21 May 2014

சுதந்திரம் !!



எண்ணங்கள் தான்
மனிதனை உருவாக்கும் !
பால்ய வயதில் ஆரம்பித்து 
பருவ வயது வரை 
அவன் காணும் காட்சிகள் 
அவனின் குணத்தை செதுக்கும் !

பார்க்கும் பார்வையை மாற்றி 
சமுதாயம் வளர துணையாய் இருங்கள் !!
சிறார்களையாவது விட்டு வையுங்கள் !
மிருகமாக மாறாதீர்கள்!
தேசத்தை இழிவுபடுத்தாதீர்!!

அறப்போராட்டங்கள் பல புரிந்து,
ஆதரவில்லாமல் பல உயிர்கள் மடிந்து,
அபிப்ராயங்கள் பல  கழிந்து,
அஹிம்சா வழியை  தேர்வுசெய்து,
ஆங்கிலேயர்  ஆட்சி  கடந்து,
அரும்  பாடுபட்டு
விடுதலை அடைந்த நம்  நாட்டின்  நிலை,
அந்தோ  பரிதாபம்  !
பண்பாடு  இருந்தாலும்,
பாகுபாடு இல்லை !!
வளர்ச்சியில் போட்டிபோடுகின்றன 
பல நாடுகள் ,
நாமோ  
ஜாதியில் ஆரம்பித்து,
வீதியிலும்  பிரிவினை  கோலூற்றுகிறோம்!
வெட்க கேடான  செயலுக்கு
வக்காலத்து  வாங்கவும்  வருவர்
வர்ண கொடிகளை ஏந்தியோர் !
அறுபது  ஆண்டுகளுக்கு மேலாகியும் 
அரும்புகளுக்கு  கூட   சுதந்திரம்  கிட்டவில்லை,
சிறார் வேலையிலிருந்தும் சரி!
சில காமுகர்களிடமிருந்தும்  சரி !!
சுதந்திரம் கிடைத்துவிட்டதாம், 
நல்ல  வேடிக்கை  !
பலர் வந்து மேலிடம் சென்றாலும்,
மனிதனின் முற்போக்கு எண்ணத்தின் மாற்றமே
சுற்றுபுறத்தை சுகாதாரமாக்கும் !
சகோதர உணர்வை மேலோக்கும் !
சுதந்திர நாட்டை உருவாக்கும் !!
சரித்திர இந்தியாவையும் படைக்கும் !!

Sunday 18 May 2014

வார இறுதி !!

வார இறுதி
வசந்தத்தின் முடிவு
வருந்ததின் ஆரம்பம் :P

வார இறுதி வந்தாலே  
வாடிக்கை தான்,
கேளிக்கைகளும் வேடிக்கைகளும் !
வாடைக் காற்றோ 
வசந்தக் காற்றோ
வந்து தீண்டினால் போதும் , 
வருத்தங்களை மறந்து,
அலுவல்களை மறந்து,
விந்தையான மானிடர்களை சந்தித்து,
விருப்பமானவர்களின் நேரத்தை களவாடி 
நேசங்களை பரிமாறும் 
வேதனை இல்லா நாட்களே 
சனியும் ஞாயிறும்,
முடியும் தருவாயில் 
முடியக்கூடாதென்ற  ஏக்கமும்
மறுபடியும் குறிப்பேட்டு தாள்களை 
கிழிக்கும் ஆவலில்,
துவங்கும் நாள் தான் திங்கள் !!!

Saturday 17 May 2014

சிவகாமியின் சபதம்

நீண்ட இடைவெளியில் ஒரு புதினத்தை முடித்தேன் !!
கல்கி யின் மற்றுமொரு காவியம் !!
வைத்திருக்க வேண்டிய ஒரு திரவியம் !!

சிவகாமியின் சபதம்
மனம் கவர்ந்த புதினம்,
நெஞ்சம் உறைய வைக்கும்
ஒரு பெண்ணின் சபதம் ,
மனம் கவர்ந்தவன்
உறை நழுவிய வாளானான்!
புனிதன்
பித்தனானான் !

பெண்ணின் நேசம் ,
பொறுமையில்லா கோபம் ,
போரையும் உருவாக்கும்
என்பதின் சான்று
இந்தக் கல்கியின் காவியம் !
புதிர்கள் நிறைந்திருந்தாலும்,
புன்முறுவல் பூத்து மூடி வைத்தேன்,
பேரழகியின் முடிவை ஆமோதித்து !!

Wednesday 2 April 2014

ஏக்கம்!!!


மீனவனின் வரவை நோக்கும் 

காதலி !


வஞ்சர மீனு  

வேகுது,
வாசனை எல்லாம்  
தூக்குது, 
வாசல் முட்டம்  
தவிக்குது, 
வீங்குது என் இதயந்தான் 
வளருது உன் நெனப்புதான் 
வேங்கை போல வெரஞ்சு வந்து, 
வெண்ணிலா என்ன வசப்படுத்த மாட்டீரோ ?

Friday 28 March 2014

காதலே !!


எதிர்பார்ப்பில் சிறந்தது 
மனம் முழுதும் காதலுடன்

ஒருவரை நேசிப்பதே !!!


காரிருள் வேளையில்
கண்மூடும் நேரத்திலும் 
உன் முகம் மட்டுமே
என் விழிகள் 
எதிர்பார்த்து காத்திருக்கும் 
கண்ணவனனா கனவா
கனவில் மட்டுமல்ல ,
காலம் முடியும் வரையிலும் !!

Saturday 22 March 2014

அவனின் அவள் !!

காதலில் கரைந்த இருவரில் ,
ஒருவர் மரணமாக 
காதலியின் மனமோ அவன் வரமாட்டான் எனதெரிந்தும் 
காத்திருக்கிறாள் அவனின் நினைவுகளுடன் 
காதலுக்கு வயதுமில்லை 
மரணமானாலும் என்ற என்ன அலைகளுடன் அவனின் அவள் !!


வேகமாய்  நகரும்  நாட்கள் 
விந்தை  செய்ய  முடியா வண்ணங்களில் 
வகை  வகையான  மலர்கள்  
வாகை  சூட  வரும் வேளை எண்ணி 
வெண்பனி  காலத்திலும்  உன்னை  நினைத்து 
வளர்ந்து  கொண்டிருக்கின்றன  ,
உன்னை  காணும்  ஆவலில் ,
உன்னிடம்  மாலையாகும்  ஏக்கத்தில்  !!
வெயில்  காலத்தில்  வெறிக்கும்  பார்வையில் 
விடைபெற்று  சென்றாய் 
நீ வரும்  நாளுக்காக  வீசும்  அனலிலும் 
உன்னை வரவேற்க   
வஞ்சனை  பாராமல்  விதைகள் தூவினேன் !!
மொட்டு  வெடித்து  மலராகும்  பருவம்  போய் 
மலர்  உலர்ந்து  சருகான  போதும்  நீ  வரவில்லை  !
வீசும் காற்றில் கலந்த நீ 
வரமாட்டாய்  என்றாலும்  
மண்ணாகி  போன  உனக்கு  நான்  உரமாகவது  இருப்பேன் ,
விருப்பமற்ற வாழ்க்கையிலும்,!
உன் வரவை எண்ணி நாட்களை நகர்த்துவேன் ,
என்  காதலில்  தோற்கவில்லை  என்றுரைப்பதற்காக!!

Tuesday 18 March 2014

காலஞ்சென்ற கன்னிகைக்காக!!

பெண்களை மதியுங்கள்,மிதியாதீர் !!
காரணமில்லாமல் காளனால்(மானிடன் ஒருவனால் )

பழிவாங்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக !!

வரைவுகள் இல்லா,
வசைகள் இல்லா, 
வசதிகள் பாரா,
வயோதிகம் எண்ணா ,
வேகம் குறையா,
வருங்காலம் நோக்கி ஓடும்
வாலிபா !
நேரம் காலம் பாரா
உழைக்கிறாய்,
உன் வீட்டு மாந்தர்தம் மேன்மைக்காக! 
உன் வீரம் காட்ட
வேசியையும் தேடுகிறாய் , 
உன் கேளிக்கையை சகிக்கும்
பெண்ணையும் நாடுகிறாய் !
உன்னை புகழ்வதா ?
இல்லை இகழ்வதா?
விபரீதமறியாமல் செய்தாயா
இல்லை
வீராப்புக்காக செய்தாயா ?
தெரியவில்லை !
விலைபோனது உயிர் 
மட்டுமே !
சுதந்திரக்காற்று அலைமோதுகிறதாம்,
கூறுகிறார்கள் சொற்பொழிவளர்கள்
மேடைபேச்சுக்காக!
வாழ்க்கை என்னும் நாடகமேடைக்கல்லவே?

Thursday 13 March 2014

மலரே !!

மலரின் வாசனையில்
நாம் மிதக்கிறோம் 
மலருக்கு என்ன கவலையோ ?

கேட்போம் என்ன தான் என்று !!!

வஞ்சிக்காதே மலரே ,
வண்ணங்கள் பல கொண்டு
வானின் வானவில்
வனத்தில் வந்ததை போல்
என் மனதை கொள்ளை கொள்ளும்
வசீகர நறுமணத்தை கொண்டு
என்னை வசப்படுத்தும் நீ ,
வீணற்ற கோபம் கொண்டு
வாடிவிட்டாயே
ஏன்?
நான் உன்னை சூடியதாலா ?
இல்லை
உன் அமிழ்தத்திற்காகவே
ஏங்கும் வண்ணத்துப்பூச்சியின்
பசி தீர்க்காமல் வந்த வேதனையிலா ??

Monday 10 March 2014

கன்னியின் கள்வன் !!

உன் கரு விழி பார்வையில்
கரைந்தது என் உள்ளம் !
உன் முத்துக்கள் சிந்தும் சிரிப்பில்
முற்றும் மறந்தது என் சிந்தை !


காதலில் விழுந்தோர்,
         கவிகள் ஆகிவிடுவர் !!

காதலனின் நினைவில் காதலியின் எண்ணங்கள் இதோ ...


கால நேரம் பார்ப்பதில்லை
காதல் புரிய நேரமில்லை
கதை பேசும் சுற்றாருடன்
கண்கள் நிறைய ஆர்வத்துடன்
கவிதை தொடுக்க ஆரம்பித்தேன்
கண் முன்னே தெரியும் கயவர்களை பார்த்து !!
எங்கே என்னை கவர்ந்தவன்
கண்டு கொள்வானோ என்ற ஏக்கம் ..
திரும்ப வேண்டும் என்ற ஆவலுடன்
தேடினேன் திரை மறைவிலிருந்து !!
காரிருளில் மின்னும் மாணிக்கம் அவன் !
எட்டுத் திக்கும் தேடினாலும்
அவன் போல் யாரும் இல்லை !
ஆனால்
அன்று போல் இன்றும் விலகினான்
கடைக் கண் பார்வை மட்டும் போதுமென்று !
மருகினேன் ! கசிந்தேன் !
மனதில் பதிந்த அவன் நினைவுகள்
என் பிம்பம்
பாரம் பாராமல்
அவன் கரம் பற்றிய நாட்களை
கரை படாமல்
காதல் செய்கிறது
கனவிலே !

Sunday 9 March 2014

என்னுள் அவள்!!

காதல் - இந்த ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள்
கலந்த உணர்வுகளின் பிரதிபலிப்பை வெவ்வேறு விதமாக காணலாம்.
கருவறையில் இருக்கும் குழந்தை மீதும் காதல்
கடைக்கோடியில் வாழும் கள்வன் மீதும் காதல்!
காதலுக்கு,
வயது வித்யாசமில்லை
மனம் ஒன்றே எல்லை !!


ஒரு காதலனின் உணர்வு இங்கே ..

அவள் சிணுங்கல்களை
சேகரிக்கிறேன்
சிதறாமல் இருக்க
மற்றவர் கவராமல் இருக்க !
அவளின் மகிமையை
போற்றுகிறேன்
மங்காமல் இருக்க
மற்றவர் கண்படாமல் இருக்க !!
அவளின் கேசத்தை
பேணுகிறேன்
மழுங்காமல் இருக்க
மற்றவர் நோக்காமல் இருக்க!!
அவளின் பண்பை
ரசிக்கிறேன்
வற்றாமல் இருக்க
மற்றவர் வசமாகாமல் இருக்க !!
அவளின் உரிமையை
கொண்டாடுகிறேன்
குறையாமல் இருக்க
மற்றவர் எதிர்பாராமல் இருக்க !!
அவளின் சுவாசத்தை
சுவாசிக்கிறேன்
சரியாமல் இருக்க,
மற்றவர் நேசிக்காமல் இருக்க !
என்னிலிருந்து விலகாமல் இருக்க !

 

Saturday 8 March 2014

Happy women's day!!!

நம் முகம் பார்க்க ஏங்கும் முதல் ஜீவன்
நம் கிறுக்கல்களையும் பெருமை படுத்தும் ஒரு ஜீவன்
நம் கோபங்களையும் சிரிப்பால் மறைக்கும் ஒரு ஜீவன்
பல அடைமொழிகள்
நம் வாழ்க்கை யின் நிகழ்வுகள் சுழல்வது
அம்மா என்ற ஒரு பெண்மணியின் மடியில் தான் !


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!


மங்கையை ஏளனப்படுத்தாதீர் !
அவர்களின் மனம் அறிந்து
பெண்களை போற்றுவீர் !!


வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை
வசனமாக ..
அவள் மணிகள் அல்லவே
வர்ணிக்க வேண்டாமோ ?
மணிகள் சிதறிய ஒலி போல்
அவள் புன்னகை..
மதி மயங்க வைக்கும்
அவள் பாடல்கள் ..
மனதை வருடி ஏங்க வைக்கும்
அவள் அரவணைப்பு ..
எதிர்பார்க்காமல் அள்ளி கொடுக்கும்
அவள் அன்பு..
ஒரு நொடி பிரியா அவளின் உறுதி ..
ஏசினாலும் நேசிப்பவள் ..
கடிந்தாலும் காதலிப்பவள் ..
யோசிக்க தேவையில்லை
எங்கு சென்றாலும்
அக்கறை என்னும் நிழலாக
இருக்கும் அம்மா வே தான் !!

 

Thursday 6 March 2014

FIRST ENTRY:)

My First and my own blog:)Happy to be a part of this Blogging World!
when I started scribbling in the past, I never imagined that I would end up in creating a blog for all my scribbling. Being an amateur in writing,I might be wrong in expressing my opinions or views to others.Hopefully I might improve myself on this.Kindly apologize for that!
Let me mark my first entry into this world with my very own Tamil poetry:)

This one is about the accidents happening in and around me not because of train or bus, it's due to our carelessness.

வசந்தமான மாலை
வழக்கம் போல் நேரமின்மையினால்
விறுவிறுவென நடந்தேன்
விரைவு வண்டியை பிடிக்க !
விரைந்தோடித் தான்
பிடித்தேன் அன்று !!
விழி முழுக்க தூக்கம் !!
தாலாட்டு வேண்டுமல்லவா!
தலையணி கேட்பொறியை சொருகினேன்
கண்ணயர்ந்தேன் என் ஸ்தானம் வரும்வரை !
தடம் கடக்கையில்
தவறாமல் வரும் நினைவு,
விபரீதம் அறியாமல்
விலை போன உயிர்கள் பல
வேடிக்கையான செயல்களால் !
விதியை மாற்ற இயலாது ,
நெறியை பின்பற்றலாமல்லவா?
கழட்டினேன் தலையணி கேட்பொறியை
திருப்தியடைந்தேன்
என்னுள்!
திருத்த முயற்சிக்கிறேன்
சுற்றத்தை !!