Wednesday 21 May 2014

சுதந்திரம் !!



எண்ணங்கள் தான்
மனிதனை உருவாக்கும் !
பால்ய வயதில் ஆரம்பித்து 
பருவ வயது வரை 
அவன் காணும் காட்சிகள் 
அவனின் குணத்தை செதுக்கும் !

பார்க்கும் பார்வையை மாற்றி 
சமுதாயம் வளர துணையாய் இருங்கள் !!
சிறார்களையாவது விட்டு வையுங்கள் !
மிருகமாக மாறாதீர்கள்!
தேசத்தை இழிவுபடுத்தாதீர்!!

அறப்போராட்டங்கள் பல புரிந்து,
ஆதரவில்லாமல் பல உயிர்கள் மடிந்து,
அபிப்ராயங்கள் பல  கழிந்து,
அஹிம்சா வழியை  தேர்வுசெய்து,
ஆங்கிலேயர்  ஆட்சி  கடந்து,
அரும்  பாடுபட்டு
விடுதலை அடைந்த நம்  நாட்டின்  நிலை,
அந்தோ  பரிதாபம்  !
பண்பாடு  இருந்தாலும்,
பாகுபாடு இல்லை !!
வளர்ச்சியில் போட்டிபோடுகின்றன 
பல நாடுகள் ,
நாமோ  
ஜாதியில் ஆரம்பித்து,
வீதியிலும்  பிரிவினை  கோலூற்றுகிறோம்!
வெட்க கேடான  செயலுக்கு
வக்காலத்து  வாங்கவும்  வருவர்
வர்ண கொடிகளை ஏந்தியோர் !
அறுபது  ஆண்டுகளுக்கு மேலாகியும் 
அரும்புகளுக்கு  கூட   சுதந்திரம்  கிட்டவில்லை,
சிறார் வேலையிலிருந்தும் சரி!
சில காமுகர்களிடமிருந்தும்  சரி !!
சுதந்திரம் கிடைத்துவிட்டதாம், 
நல்ல  வேடிக்கை  !
பலர் வந்து மேலிடம் சென்றாலும்,
மனிதனின் முற்போக்கு எண்ணத்தின் மாற்றமே
சுற்றுபுறத்தை சுகாதாரமாக்கும் !
சகோதர உணர்வை மேலோக்கும் !
சுதந்திர நாட்டை உருவாக்கும் !!
சரித்திர இந்தியாவையும் படைக்கும் !!

No comments:

Post a Comment