Thursday, 21 August 2014

கனவுகள் !!

நேசிப்பவர்கள் கூட 
நசுக்கி விடுவார்கள் (சில நேரங்களில்)  நம் மனதை 
நாம் தோற்று விட்டால் !
சகிப்பு தன்மை இருந்தால் மட்டுமே 
சாதிக்க முடியும் !
கலாம் சொன்னது போல் ,
பெரும் கனவு காண்பவர்களும் பெரும் கனவுகள் எப்போதும் அப்பாற்பட்டதாகும்!

கனவு காணுங்கள் நினைவாகும் வரை !

வாழ்கையில் விருப்பங்களில்லால்
ஒருவருமில்லை !
அதுபோல் தான் நானும் !
என் கனவுகளை
நீ விரும்பாமல் இருக்கலாம் !
ஆனால்,
வீசச் சொல்லாதே !
கனவுகள்  காகிதமல்ல,
கசக்கி  எறிவதற்கு   !
காய்ந்து  போன,
மனதின்  குமுறல்கள்  !
சரிந்து  போன,
சரிதத்தின்  சத்தியங்கள்  !
வறண்டு போன,
வாழ்வின்  வினைகள்  !
நகர்ந்து  போன,
நாட்களின்  நினைவுகள் !
நேற்றைய  பொழுது
எனக்கு  கைவிரித்தாலும்,
நாளைய  விடியல்
வழி  காட்டும்,
என்  வாழ்க்கைக்கும்  சரி  !
என்  கனவுகளுக்கும்  சரி  !

Tuesday, 19 August 2014

புகைப்படம்!!!

இன்றுடன் 175 வது ஆண்டு ஆகியது புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு !
விஞ்ஞான வளர்ச்சியில் 
பல மாற்றங்கள் உலகம் கண்டாலும் 
பழையதை நினைத்தால் என்றுமே 
பரவசம் தான் !!
அதற்காக என் சிறு அர்ப்பணம் !!

படங்கள் பார்ப்பதுக்கு மட்டுமல்ல,
பதிவு செய்வதற்கும் தான் !
பால் நிலவை சுற்றி மறைத்துக் கொள்ளும் 
நட்சத்திரங்கள் போல், 
பதிய மறுத்த நினைவுகள் கூட 
புரட்டும் பொழுது,
புல்சிலிர்க்க வைக்கும் 
               புகைப்படங்கள் மூலம் !


Sunday, 17 August 2014

நட்புக்காக !!

நண்பர்கள் தினத்தன்று பதிவு செய்ய வேண்டியது !
பழமொழி சொல்வதை போல் 
எவ்வளவு நண்பர்கள் இருப்பது பெரிதல்ல 
எவ்வளவு பேர் வருவார்கள் ஆபத்து என்றால்!
அங்கே தான் தெரியும் நம் நட்பின் ஆழம் எவ்வளவு என்று !
ஆச்சர்யமல்ல மாறி வரும் சுற்றத்தில் 
மனிதர்கள் மாறுவதும் இயல்புதானே? 

அழகான நாட்கள் 
ஆழமான நட்புடன் 
இனிமையான பொழுதுகள் 
ஈரமான மனதுடன் 
உரிமையான சண்டைகள் 
ஊஞ்சலாடிய கனவுகள் 
ஐயமில்லா ஒற்றுமை
எண்ணிலடங்கா நினைவுகள் 
ஏமாற்றமான தருணங்கள் 
ஒருமையான உறவுகள் 
ஓசையில்ல அழுகைகள் 
ஔவை உரைத்த கல்வியுடன் 
கலந்து போன நட்பினை 
எது வந்தாலும் பிரிக்க இயலாது 
காற்றில் கலந்த நீரைப்  போல !!

Monday, 11 August 2014

என் உயிர் -தம்பி !

நேற்று எழுதவேண்டியது !
அவசரத்தில் எழுதிகிறேன் 
தினமும் எழுதுவேன் 
என் தம்பியின் பாசத்தை !
நேற்று மட்டுமல்ல
என்றுமே ரக்ஷாபந்தன் தான் !!

உன் வருகையில்
நான் திளைத்தேன்! 
உன் சிரிப்பில் 
நான் நெகிழ்ந்தேன்! 
உன் பரிவில் 
நான் வியந்தேன் !
ஆச்சர்யம் தான் !
அடித்து கொள்ளும் வயதில் 
நீ விட்டுகொடுப்பதைக் கண்டு !
என் தலையசைவில்,
உன் முடிவுகள் !
என் சொல்வேன் !
வார்த்தைகள் போதாது, 
நம் நேசத்தை விவரிக்க !!
எத்துனை ஜென்மங்களானாலும்,
என் தம்பி நீ யாக வேண்டும் !!
பிரார்த்தனை தேவையில்லை,

நம் பாசம் நம்மை சேர்க்கும்!!