Monday 20 February 2017

நேற்று நந்தினி! நாளை ?

இரவல் வாங்கித்தான் 
இளந்தளிர் அவள் வளர்ந்தாள்!
படுக்கையில் போன 
தகப்பனின்  உயிர் !
பாதியில் நின்று 
போன படிப்பு !
பகுதி நேரக்
கூலியானாள்!
மீதி நேரக் 
காதலியானாள்!
அவனை நம்பி 
அவளையே கொடுத்தாள்!
மனம் புரிய சென்றவள் 
விருந்தாக்கப்பட்டாள்
அவன் நண்பர்களுக்கு !
அடங்கா 
ஜாதி வெறி, 
படுக்கும் பொழுது 
பார்க்காத தீண்டாமை,
உரிமை கேட்கும்போது 
ஒடுக்க படுகிறாள் !
யாதுமாகி வந்தவள் 
யாவரும் காண முடியா,
மண் தின்னும் சவமானாள்!
நித்தமும் நூறு பிழைகள் 
அரங்கேறும் நாடக மேடை இது !
இன்று அவள் பெயர் வெளிச்சத்தில்,
நாளை வேறு ஒருத்தி !
அவள் சென்று விட்டாள்
அவளின் துயரங்களை 
கிணற்று புழுக்களிடம்
      பகிர்ந்து விட்டு !
செய்தியாகி போனாள்
நமக்கும் !
வலியாகிப் போனாள் 
பெற்றவளுக்கு மட்டுமே  ! 



அவள் வளர்ந்த சூழ்நிலையா?

சூழ்நிலையினால் விளைந்த காதலா?
காதலால் வளர்ந்த மோகமா ?
மோகத்தினால் விளைந்த மோதலா ?
மோதலால் தலைதூக்கிய ஆத்திரமா?
ஆத்திரத்தினால் அரங்கேறிய நிகழ்வுகளா?
அவளே அறிவாள்!

2 comments: