Saturday, 26 July 2014

தனிமை!

தனிமை சிந்தனை கடலில் 
தேவைகளை தேடலாம் !
தனியாக இருப்பதும் ஒரு சுகம் !
மனமறிய கிடைக்கும் ஒரு வாய்ப்பு!
வருத்தம் வேண்டாம் !
செயலில் வெளிப்படுத்தலாம் !

தனிமை 
மரணத்தை விட 
கொடுமையானதா?
இல்லை 
தவத்தை விட 
சிறந்ததா? 
தனிமை ,
தேடல்களை அதிகரித்து, 
தன்னிலை உணர்ந்து ,
தன்மனதை திடமாக்கும் 
ஒரு திரவியம் !!


Tuesday, 22 July 2014

பயணம் !!

நாட்கள் சென்றாலும் 
நட்பு தொலைந்தாலும் 
நினைவுகள் நெருடும் 
நேசம் இருக்கும் வரை!
பயணம் முடியும் வரை !

எதிர்பார்ப்புகளுடன் 
என் கலகத்துக்காக
காத்திருந்தேன் !
கிடைத்தது 
ஜன்னலோர இருக்கை!
நீண்ட தூர பயணக் களிப்பு ,
கம்பிகளின் நடுவே 
கலர் கலராய் கனவுகள், 
கோர்ந்தன கிரகத்தை சுற்றும் கோள்களுடன்,
கற்பனை காற்றில் 
மிதந்தேன் துணையை நோக்கி ,
களவாடிய நேரங்கள்,
கரைந்தன,
காண நேரத்தில் !
தண்ணீரால் அல்ல 
கண்ணீரால் !




Sunday, 20 July 2014

உணர்வுகள்!!!

உலகம் - பல கலாச்சாரங்கள் 
நிறைந்த ஒரு பழரசம் என்று சொல்லலாம் !
மனிதனின் எண்ணங்களும் அது போல் தான் !
தெளிவான நீரோடை போல் எண்ணங்கள் என்றும் இரா!!
அனைத்தும் அவனவன் மனம் போல் தான் !
எதுவும் நிரந்தரமில்லாதது !

சில உணர்வுகளில், 
உன்னதத்தை அறிகிறோம்!
சில உன்னதங்களில், 
உரிமைகளை அறிகிறோம்!
சில உரிமைகளில், 
உறவுகளை அறிகிறோம், 
சில உறவுகளில், 
உலகினை அறிகிறோம் !!




Saturday, 12 July 2014

தன்னம்பிக்கை !!

சிறு இடைவெளிக்கு பிறகு 
என் சிறிய பதிப்பு 
தன்னம்பிக்கை இழந்தவன் 
தும்பிக்கை இழந்த யானை போல் . 
தவறு செய்வது இயல்பு 
திருத்தி கொள்வது இயற்கை 
அது போல் தான் 
காலம் யாரையும் மாற்றும் .. 
நம்பிக்கை வைக்கலாம் 
கடுகளவு போதுமே !!!


துயரம் யாருக்குத் தான் இல்ல
மாட்டிற்கும்  இருக்கிறது 
வெட்டுகிறார்கள் என்று... 
மனிதனுக்கும்  இருக்கிறது 
விட்டுப்போகிறார்கள் என்று.. 
துவண்டபோது யாரும் வரவில்லை..
தூக்கி நிறுத்தவும் யாரும் வரப்போவதில்லை... 
யாரையும் நம்பாதே 
உன் தன்னம்பிக்கையை தவிர..
தன்னல்முள்ள ஜீவனாக மாறு,
தடைகளை தகர்த்தெறி, 
தீஞ்சுவாலை போல் 
விரைவாகள் முன்னேறு.. 
திசையெங்கும் உன் புகழ் பரவும்!
திகைத்துப் போவர்
 உன்னை இழிந்தவர்கள் !!