Wednesday, 30 November 2016

தேவதை !

என்ன தான் 
மடிக்கணினியில் 
ஓயாமல் வேலை பார்த்தாலும் !!!
என் அம்மாவின் 
மடியில் படுத்து
அவர்களின் 
ஆசைகளை,
புலம்பல்களை, 
ரகசியங்களை , 
கேட்பதின் சுகம்
எதற்கும் ஈடாகாது !

அம்மா 
ஒற்றை வார்த்தை போதும் 
என் மனம் முழுதும் நிறைந்த ஒரே தேவதை !
ஜென்மங்கள் பல கடந்தாலும் 
நீ மட்டும் வேண்டும் என் தாயாக !
உன் உயிரில் வந்த நான்  !
உனக்காக உயிரையும் தருவேன் நான் !

Friday, 25 November 2016

அறிமுகம் !

சிலர் பலர் 
நிறைய மக்கள் உண்டு இந்த வகையில் !
என்னை பொறுத்த மட்டில் 
வாழ்க்கை ஒரு வட்டம் , 
முற்று பெறாதது இறந்த பின்னும் சரி !
சந்திக்கும் மனிதர்கள் ஆயிரம் ,
அனைவர்க்கும் பின்னே சோகங்களுண்டு !
யாருக்குத்தான் இல்லை :)
சிரத்தையெடுத்து சிரிக்க வேண்டும் !
பாகுபாடில்லாமல் பழக வேண்டும் !
இந்த நொடியில் 
முடியும் வாழ்க்கை ! 
வெறுக்காதே எவரையும்,
நேசிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை !



சிலரின் பெயர்
போதும்
அவளின் முகம் 
பிரகாசமாக ! 
சிலரின் அறிமுகம் 
போதும் 
அவளின் மனம்
விசாலமாக !
சிலரின் நிழல் 
போதும் 
அவளின் நினைவுகள் 
கரைய !

Friday, 18 November 2016

நிழற்குடை !

உன்னுடன் இருக்கும் நிமிடங்கள்
என் நாடித்துப்பில் 
பதியும் நிஜங்கள் பெண்னே !


நீ இருக்கும் இந்த நிமிடம் 
நிஜம் பொய்த்து போகிறது!
நீ பேசும் இந்த நிமிடம் 
இரைச்சல்களும் இனிமையாகிறது !
நீ நடக்கும் இந்த நிமிடம் 
நடமாட்டமும் ஸ்தம்பிக்கிறது ! 
நீ சிரிக்கும் நிமிடமோ 
சிந்தனைகள் சிதறல்களாகிறது !
உன்னை அறியாமல் 
நீ எனக்கு தரும் நிமிடங்கள் 
போதும் பெண்னே 
நிழல் தேடும் நம் நினைவுகளுக்கு !

Monday, 14 November 2016

நீ போதுமடி !!

கண்முன்னே தெரிவதெல்லாம் 
நிஜமல்ல பெண்னே 
கண்ணிமைக்கும் நொடியில் 
காகிதத்தில் அச்சாகும் 
காலமிது !
காளன் கூட 
காதலனாகிவிட்டான் 
மானிடர்களுக்கு !
மனிதர்கள் மதிமயங்கி 
நன்றி பாராமல்,
மனித நேயம் பாராமல் ,
இருப்பதினாலோ ,
அறியேன் !
அதனால் பெண்ணே ,
காலம் சிறிது  !
மன்னித்து பழகு !
மரணித்த பின் அழாதே!
உன் மடியில் படுத்துறங்க 
ஆசை இல்லையடி எனக்கு !
உன் மறுபேச்சு போதுமடி 
இப்பிறவியில் எனக்கு !

மனிதர்களை மதிக்க வேண்டும் 
அதற்கும் மேலாக அவர்களும் உணர்வுகளை !
உருவத்தினாலோ பணத்தினாலோ 
உடையினாலோ எதனாலும் 
எவரையும் எடை போடாதீர்கள் !
மனம் அனைவர்க்கும் சமம் !
வெறுத்தால் விலகி விடுங்கள் !
வறுத்தாதீர்கள் :)
எவருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள் 
உங்கள் வாழ்க்கையை !!

Saturday, 12 November 2016

உறுதுணை!

தனிமை தவிப்புகள் 
தியாகத்தினாலும் வரலாம் 
திடமில்லா மனதினாலும் வரலாம்  
கடந்து வந்த பாதை 
கடினமோ களிப்போ
கழித்துவிடு!
கண் சிமிட்டும் இந்நொடியை
எண்ணிக் கொள்! 
கனவோ நினைவோ 
கண் முன்னே நடக்கும் 
நிஜம் இதுவே !
அதை காணும் உன் உயிர் 
மட்டுமே உனக்கு உறுதுணை !
உன் உடலும் தான் !

கவலைகளை தவிர்த்து உன்னை காதலி!
காலம் உன்னை காதலிக்கும் !