Saturday, 31 October 2015

பெண்மை!!!


பொறுமையில் பெருமையில் திளைக்கும் பெண்களுக்கு !!!


பொறுமையின் காதல் 
போரடித்துவிட்டது ! 
போர்க்களத்தில்
        புகலாமா? இல்லை ,
பிடிமானமில்லா
        வாழ்க்கையையே 
புறந்தள்ளலாமா?
பெண்மையின் மறுபெயர் பொய்மையோ !
பொய்மையில் தான் ,
பெண்ணின் வாழ்க்கை போகுமோ !
புரியவில்லை !
புரியாத புதிர்  தானல்லவா 
வாழ்க்கையே !!!

Monday, 13 July 2015

அரவணைப்பு !!


நேரம் காலம் காதலுக்கு மட்டுமில்லை,

நட்புக்கும் தான் !

தவறாமல்  தலையைணையின்
அரவணைப்பில்  வரும்  தூக்கம்,
நித்திரை  வருமுன்னே
நடந்தேறும்  சிறு  அரங்கேற்றம்
கனவேன்பதா  ?
கடந்து போன
நினைவென்பதா!/
உன்னோடு
      நடந்த  பாதைகள்,
அவசரமாக
    அபகரித்த  நிமிடங்கள் ,
ஆரவாரமில்லாத
    அன்பான  கேளிக்கைகள்,
அளவு கடந்த நட்புடன்,
அரை  நொடியும்
    அகலாதிருந்த நம்  உறவு,
கோரிக்கையினால்  பிரிந்தாலும்
விழி  மூடும்  வரை
புரட்டுவேன்  நம்  காலச்சுவடை,
நினைவென்னும்  பெட்டகம்  வழியாக !!

Tuesday, 21 April 2015

அவனின் அவள் !!

அந்தி மாலையிலும் சரி 
அதிகாலையிலும் சரி 
அவளின் நினைவுகளுக்காக 

என்றுமே அவன் !

காகிதத்தில் 
அச்சடிக்கும் காதலா ?
இல்லவேயில்லை 
கல்லில் பதிக்கும்
காவியக் காதல் !
கதைகளில் காணக்கிடைக்காத, 
காதலன் நான் !
தற்பெருமை கொண்டேன்,
தேவதை நீ எனக்குதானென்று !
கண்களில் 
காதல் பேசிய நீ, 
கனவில் 
கதை பேசுகிறாய் இன்று !
நேரில் 
நிமிர்ந்து பேசிய நீ, 
காற்றில் 
கசிந்து செல்கிறாய் இன்று !
விதியால் 
இணைந்த நாம் !
வீதியில் உன் உயிர் பிரிந்ததே,
என் சொல்வேன் நான்,
கவனம் இல்லையே அன்று, 
கண்மணி நீ என்னுடன் இருந்த பொழுது !
காதல் வானில் சிறகடித்த என் மனம்,
கவிதையாய் வடிக்கிறது 
உன் நினைவுகளைக் கொண்டு !

Sunday, 29 March 2015

கவிதையே!!

கரைந்த காதலில் 

காதலன் !

காகிதமா,
என் காதல் உனக்கு  !
கண் முன்னே, 
கடந்து செல்லும் நீ 
கவிழ்ந்த முகத்துடன், 
செல்கிறாயே ஏன் ?
கதைகள் பேசி, 
கழிந்த காலங்கள், 
கலங்கடிக்குது என்னை !
கரைகிறது என் மனம்,  
கண்மூடித்தனமான
உன்  நினைவுகளால் !
உறையுது என் இதயம், 
உயிரற்று போன 
உன் நேசத்தைக் கண்டு !
கேள்வி கேட்க ஏதுவில்லை!
கேட்பாரற்று மூர்ச்சையானது 
என்னுடைய காதல், 
இன்று கசியும் என் கண்ணீரில், 
கவிதையாய் மட்டும் நீ!

Thursday, 19 March 2015

பழைய காலம்!


என்றோ எழுதியது, 
இன்றைய பதிவு !

சிலரின் தாக்கம் என்றுமிருக்கும் 

என்பதன் எடுத்துக்காட்டு !


இதமான காற்றின் தாக்கத்தில்,
இன்பமான ஊர்தி பயணம், 
இல்லம் நோக்கி !
பக்கத்துக்கு இருக்கையில், 
பல் போன பாட்டி!
பழைய காலம் வேறு, 
பயத்தில் பேசுவதை தவிர்த்தேன் !
இடைவேளை நிறுத்தம்தான் ,
எங்களின் இணைப்பு !
அன்னியோன்யமான அன்பு ,
அந்நியராயிருந்தாலும்!
உரிமையுடன் உபசரிப்பு ,
அந்த சிறு இருக்கையிலும் கூட !
கண்டு வியந்தேன் !
என்னை எண்ணி மனம் குறுகினேன் !
வார்த்தைக்கு வார்த்தை ,
கடவுள் ஆசிர்வாதம் இருக்கட்டும் !
பழைய மனிதர்கள் 
வயதில் மட்டுமல்ல ,
மனதிலும் சரி ,
குணத்திலும் சரி,
பண்பிலும் சரி ,
நாகரீக மோகத்தில் ,
பழசை மறக்காதவர்கள் !
மற்றவரின் மரியாதையும் மறக்காதவர்கள் !

Monday, 9 March 2015

தவிப்பு !!!


காதல் 
கரையும் ஒரு திரவியம் !
வார்த்தைகள் தேவையில்லை 
மௌனம் போதும் !



என் கனவில் நீ,
கரையும் நினைவுகளில் நீ! 
கசியும் கண்ணீரில்  நீ,
சிதறும் எண்ணங்களிலும் நீ! 
நேற்றைய பொழுது நீ, 
நாளைய காலையும் நீ! 
நிஜத்தின் பிம்பம் நீ,
என் நெஞ்சத்திலும் நீ !
கலைந்த காதலிலும் நீ
காணும் நாளையிலும் நீ  !
என் நிமிடங்கள் 
உன் நினைவுகளில் !
நிலையறிந்து 
என்று வாராயோ ?

Thursday, 5 March 2015

அவளுக்காக !!!

துள்ளி திரிந்தவளே,
என் உள்ளம் கவர்ந்தவளே !
உனக்காக இக்கவிதை !



மாலை வேளை,

மயங்கும் சூரியன்,
மதி மயக்கும் என்னவளைக் கண்டேன் !
அவள் சென்ற வழி, 
மனம் சென்றது !
அவளை எண்ணி, 
நேரம் கழிந்தது !
தமிழன் மரபு இதுவில்லை தான் , 
தனிமையின் மரபு வேறல்லவே !
தவிர்க்க முடியாமல், 
அவள் குடிலின் மதில் மேல் நான் !
என்னை கண்டு அவள் மிரள, ,
அவளை கண்டு நான் மலைக்க, 
மிரண்ட அவளை நான் தாங்க,
அரங்கேறியது நாடகம் 
இருவரின் விழிகளுக்கிடயே ! 
நேரம் கடந்தது!
பிடி தளர்ந்தது! 
பிடிப்பு அதிகமானது !!!
அறிமுகமில்லா சந்திப்பு, 
அந்தம் வரையிலான உறவென்பதை
சொல்லாமல் சொல்லியது, 
அவளின் வெட்கம் !!

Friday, 27 February 2015

ஹைக்கூ -3

கரு விழிகள் 
ஆழம் தெரியாமல்,
காதலில் கரைந்தாலும் 
காலம் கதை சொல்லும், 
கனவுகளுக்கும் 
அளவு உண்டென்று !!

Tuesday, 17 February 2015

பதிவு!!!

சோம்பல்
சாத்தானைக் கூட 
சாது ஆக்கிவிடும்,
என்னைப் போல :)

பல நாட்களுக்குப்  பின்  
ஒரு ஹைக்கூ !

நேற்றைய 
      நினைவுகள், 
இன்றைய 
      பதிவுகள்!
நாளைய 
      கனவுகள்,,
இன்றைய 
      அனுபவங்கள் !