Thursday, 28 September 2017

Adieu, Blogspot! Hey Wordpress!

Thank you very much for taking your time out and reading my blog.
This means a lot to me as whenever I open my blog, my eyes always stuck to the number of views:)
I know its so silly but it always gives me such a pleasure and happiness and motivation to write more in a better way.

Of late I could not post it here and started updating all my works in this below site:

My New Wordpress Blog

 Do read and let me know your feedback on my scribblings.

Thanks once again!

Happy Reading!

Life is once and Never forget to smile!

Priya Sakthivel.



Sunday, 14 May 2017

அம்மா!

சுயநலமில்லா காதலியே, 
சிந்தனையை நிஜமாகும் அன்பே,
சிரமத்தை சிதறவைக்கும் நினைவே, 
சரிவை தாங்கும் தாரகையே ,
உணர்வுகளை உரித்தாக்கும் உயிரே ,
அடைமொழிகள் பல உண்டு உனக்கு
ஆனால் எங்கள் அன்பு மட்டும் ஒன்று!
அது உங்களுக்கு மட்டும் தான் - அம்மா :) 



Saturday, 6 May 2017

விதை தூவிய
கைகள்
விடை தேடி
போராடுகிறது !
வினா எழுப்பிய
மேடை
பட்டிமன்றமில்லை,
அவையைக் கலைக்க !
நடுத்தெரு தான் !
நேற்று கழிந்த
பொழுதிக்கில்லை
இப்போராட்டம்,
நாளைய கனவுக்கு,
அடுத்த வேளை சோற்றுக்கு,
வரப்போகும் சந்ததிக்கு,
நம்மை தாங்கும்
வறளும் நிலத்திற்காகவும் தான் !
தவிர்க்கும் பதிலை
தலைமை நீ
நிராகரிக்க உரிமையுண்டு !
ஆனால்
மனிதர்களை கேளிக்கையாக்க
உரிமையில்லை !
நிவாரண அறிவிப்பு கொடுக்கும் தலைமைக்கு
நிர்வாணத்தின் வலி அறியாது போலும்!

P.S: என் அலமாரியிலிருந்து 

Thursday, 23 March 2017

கலைந்த கனவு !!

வெற்று செங்காடாய் தொடங்கிய
அவனின் வாழ்க்கை
வேகமான அவளின் பரிவால்
வானவில்லாக மாறியது !!
விசித்ரமான அனுபவங்கள்
விந்தையான செயல்கள் !
வேடிக்கையான பேச்சுக்கள்!
வழக்கத்திற்கும் மாறாக
அவனை தீண்டும் வசந்தத்தை
வாரிக்கொண்டான் 
வண்ணமலர்கள் என்றெண்ணி!
அவ்வளவு பேரின்பம்
அவளுடன் இருந்தால் !
நிரந்தரமாகக்கூடாதா
நினைத்த நாழிகைகள் பலநூறு !!
நீரில் கரையும் நிலவு போல 
கலைந்து கனவானது !
நிஜத்தின் பிடியில் 
விதி விளையாடுவதால் !
நிராசையானாலும்
அவளின் நினைவுகள் 
என்றென்றும் 
அவனின் நிழலாக நகரும் 
அவளின் வாசமிருக்கும் வரை !
அவனின் ஸ்வாசமிருக்கும் வரை !

Tuesday, 21 March 2017

கனவிலே!!

கால நேரம் பார்ப்பதில்லை
காதல் புரிய நேரமில்லை
கதை பேசும் சுற்றாருடன்
கண்கள் நிறைய ஆர்வத்துடன்
கவிதை தொடுக்க ஆரம்பித்தேன்
கண் முன்னே தெரியும் கயவர்களை பார்த்து !!
எங்கே என்னை கவர்ந்தவன்
கண்டு கொள்வானோ என்ற ஏக்கம் ..
திரும்ப வேண்டும் என்ற ஆவலுடன் 
தேடினேன் திரை மறைவிலிருந்து !!
காரிருளில் மின்னும் மாணிக்கமாய்,
எட்டுத் திக்கும் தேடினாலும்,
எங்கும்  கிடைக்கா அதிசயம் அவன் !
அன்று போல் இன்றும் விலகினாய்,
கடைக் கண் பார்வை மட்டும் போதுமென்று !
மிரளத்தான் முடியும் !
மனதினோரத்தில் 
பசுமரத்தாணி போல்
பதிந்த உன் நினைவுகளை ,
என் பிம்பம்
பாரம் பாராமல்,
உன் கரம் பற்றிய நாட்களை,
கரை படாமல்
காதல் செய்யும்
கனவிலே! 

Tuesday, 7 March 2017

உணர்ச்சிகள் !!

உணர்வற்று கிடக்கும் உடம்பில், உணர்ச்சிகள் மறையக் கூட உரித்த நேரம் ஆகும் ! நம்மில் ஒருவராய் நாதியற்று நடக்கும் போது, கவனிக்காத இவ்வுலகம் ! நடுக்கடலில் கொல்லப்படும் போது, கவனிக்கும்! நடுத்தர மக்கள், கவனித்து என்ன பயன் ? நாடு ஆளும் தலைவர்கள் கவனிப்பார்களா ? மாட்டார்கள் ! நந்தினி கொலை, நெடுவாசல் ஏமாற்றம், விவசாயிகளின் தற்கொலை, எத்தனை போராட்டங்கள்! எவ்வளவு வேதனைகள், எட்டி உதைக்கத்தான் உரிமை கொடுத்தோம் போல ! இதில் இவர்களின் , கட்சி பிரிவினைக் கூத்து வேறு ? இந்த கூட்டு களவாணிகளின் சதியால் மடிவோமே தவிர இனி ஒரு விதி செய்வோமென்பது கூற்றாக மட்டுமே ஆகும் இத்திரு நாட்டில் வாழ்ந்தால் !

Tuesday, 28 February 2017

அவன்!

கசிவது அவள் 
        கண்ணீர் தான்,
காய்வது அவள்
        மனம் தான்,
கழிப்பது அவள் 
        காலம்  தான்,
கண்முன்னே அவன்
        பிம்பம் தான்,
கதையில் அவன்
        பெயர் தான்,
கவிதையில் அவன் 
        குறிப்பு தான்,
கனவிலும் அவன் 
        நினைவு தான்,
காத்திருப்பதும் 
         சுகம் தான்,
காதலில்
 அவன்  
      மட்டுமே இருப்பதால்!!

Monday, 20 February 2017

நேற்று நந்தினி! நாளை ?

இரவல் வாங்கித்தான் 
இளந்தளிர் அவள் வளர்ந்தாள்!
படுக்கையில் போன 
தகப்பனின்  உயிர் !
பாதியில் நின்று 
போன படிப்பு !
பகுதி நேரக்
கூலியானாள்!
மீதி நேரக் 
காதலியானாள்!
அவனை நம்பி 
அவளையே கொடுத்தாள்!
மனம் புரிய சென்றவள் 
விருந்தாக்கப்பட்டாள்
அவன் நண்பர்களுக்கு !
அடங்கா 
ஜாதி வெறி, 
படுக்கும் பொழுது 
பார்க்காத தீண்டாமை,
உரிமை கேட்கும்போது 
ஒடுக்க படுகிறாள் !
யாதுமாகி வந்தவள் 
யாவரும் காண முடியா,
மண் தின்னும் சவமானாள்!
நித்தமும் நூறு பிழைகள் 
அரங்கேறும் நாடக மேடை இது !
இன்று அவள் பெயர் வெளிச்சத்தில்,
நாளை வேறு ஒருத்தி !
அவள் சென்று விட்டாள்
அவளின் துயரங்களை 
கிணற்று புழுக்களிடம்
      பகிர்ந்து விட்டு !
செய்தியாகி போனாள்
நமக்கும் !
வலியாகிப் போனாள் 
பெற்றவளுக்கு மட்டுமே  ! 



அவள் வளர்ந்த சூழ்நிலையா?

சூழ்நிலையினால் விளைந்த காதலா?
காதலால் வளர்ந்த மோகமா ?
மோகத்தினால் விளைந்த மோதலா ?
மோதலால் தலைதூக்கிய ஆத்திரமா?
ஆத்திரத்தினால் அரங்கேறிய நிகழ்வுகளா?
அவளே அறிவாள்!

Tuesday, 31 January 2017

விதியின் வழி !!!

நூறு நிமிடங்களும்,
கடந்தது பெண்னே
நின் நினைவு 
நொடி கூட
குறையவில்லை !
நேற்று பெய்த
நடுஜாம 
மழையின் ஈரமும் 
குறையவிலை !
என் கண்ணில்
துளிர்க்கும் 
கண்ணீரின் 
அளவும் 
குறையவில்லை !
உன்னால் 
நிலைகுலைந்தேனடி !
உன் நினைவால்
மதி இழந்தேனடி !
நீ பிரியாவிடை
பெற்று சென்றாயடி !
பிரிக்க மனமில்லாமல் ,
மறக்க விருப்பமில்லாமல்,
நீ என்னுள் வசிக்கிறாய்!
சூழ்நிலை எதிரியானது!
நம் வாழ்க்கை புதிரானது !
நெஞ்சமெல்லாம் நீயே !
மஞ்சம் தேவையில்லை மணியே !
உன் காதலில்
நான் மட்டுமே இருந்தது போல், 
உன் கல்லறையிலும்,
நான் மட்டுமே இருக்க விழைகிறேன்,
என் காதலியே !

Tuesday, 24 January 2017

என்னவளே !

இடம் மாறினால் 
இதயம் மாறாதடி !
நீ நிரம்பிய
என் நெஞ்சம்,
திகட்டுது, 
உன் அன்பை கண்டு !
நீ நெறிப்படுத்திய
என் பண்பு 
திகைக்கிறது, 
உன் அறிவை கண்டு !
நொடி தோரும், 
உன்னை தொழ 
ஆவலடி பெண்னே!
ஆனால்
நிமிர்ந்து நம் காதலை 
கூறத்தான் வாய்ப்பில்லையடி !
அறிவேனடி காதலி, 
ஆனாலும் 
அமர்ந்து நம் காவியம் 
எழுத என் பேனா போதுமடி !





படம் வரைவுகளை : Love!


Sunday, 22 January 2017

அவள் வருவாளா??

அவள் முகமறிந்து,
முற்றிலுமறிந்து,
ஆவல் கொண்டேன்
அவளின் அறிமுகத்திற்கு !
அகவை ஏறுவது போல்,
நாட்கள் பறந்தது !
நானும் மறந்தேன்,
நித்தம் வரும் துக்கத்தால் !
தூக்கத்தாலும் தான் !
நினைக்காத நாள்,
எதிர்பாரா தருணம்
அவளின் குறுஞ்செய்தி
          அவனுக்காக !
அவன் பதிவுகளுக்காக !
அன்று அளவளாவ 
            ஆரம்பித்த, 
எதார்த்த உறவு,
எதிர்பாரா காதலானது !
அவளின் சுவாசம் தீண்டாமல் 
அவனின் நெஞ்சம் 
அவளை நேசிக்கிறது !
அவளும் தான் 
நிபந்தனையுடன் !
நிறைவேறா 
நிகழ் கால 
கனவுகளுடன் ,
நிரந்தரமாக 
அவள் வருவாளா?
நித்திரையில்லாமல் 
நித்தமும் அவளின் 
நினைவில் அவன் !



Thursday, 12 January 2017

ஜல்லிக்கட்டு!!

தமிழர்களின் 
தன்மானத்தை
தினந்தோறும் 
வித விதமாக 
கூறு போடும் 
அரசாங்கமே !
மாநிலமும் சரி!
மையமும் சரி !
கேளுங்கள் ! 
வாயை மூடிக்கொண்டு 
என்னால் இம்முறை 
இருக்க முடியவில்லை !
ஏறுதழுவதினால் மட்டுமே 
உயிர் சேதமாம் ! 
மனிதனுக்கும் ! 
மிருகங்களுக்கும் !
என்ன வேடிக்கை ! 
எங்கிருந்து வந்த கோரிக்கை !
அனைவரின் நலன்புரிக்காகவாம் !
அமல் படுத்த வேண்டுமென்றால் 
மாமிசத்தையே தடை கூறுங்கள் !
ஏன் தமிழர்களிடம் மட்டும் 
தடை போடுகிறீர்கள் !
உத்தமமென்றால், 
உச்ச நீதிமன்றமே ?
உரக்க கூறியிருக்க வேணும் !
(திருநாள் முன்னமே )
நீங்கள் 
ஒத்தி வைத்தது,
தீர்ப்பை மட்டுமல்ல !
பலரின் எதிர்பார்ப்பையும் தான் !
உதாசீன படுத்தியது,
மக்களின் மனதை மட்டுமல்ல 
பலவருட கலாச்சாரத்தையும் !
பாரம்பரியத்தையும் !





படம் வரவுகளை : ஜல்லிக்கட்டு!

Wednesday, 11 January 2017

மாற்றம்!


மாற்றங்களினால் 
ஏமாற்றமே !
தெரிந்தும் விழுகிறோம் 
எதிர்பார்ப்பு 
எனும் குழியில் !




படம் வரைவுகளை : Expectations

Tuesday, 10 January 2017

நினைவுகள்!

நிரந்தரமில்லா
நிமிடங்களை 
நித்திரையில்லாமல் 
நிறைக்கிறார்கள்
நிகரில்லா நினைவுகளால்  !




Sunday, 8 January 2017

உறையின் காதல் !

நீ நேற்று வந்த மடல் 
நாட்கள் பல கடந்து வந்தவள் !
படிக்க ஆரம்பித்தவுடன்  
ஆக்கிரமிக்க தொடங்கியவள் !
மயக்கும் வாசனையுடன் 
நெகிழச் செய்தவள் !
படித்து முடிப்பதற்குள் 
மனதில் நுழைந்தவள்!
எழுத்துக்கள் போல் என்னுள்
பசுமரத்தாணி போல பதிந்தவள் !
என்னுள் நுழைந்த நீ, 
என் மாடத்தில் 
என்றென்றும், 
எனக்குள் பாதியாக 
வரும் நாள் 
எதிர்பார்த்து 
காத்திருக்கும், 
உன் உறை!


படம் வரவுகளை : (Picture Credit)

http://www.notonthehighstreet.com/

Sunday, 1 January 2017

தனிமையே ! காதலியே!

தனிமை ரசிகையே !
என் மனம் தாவும் அழகியே !
வார்த்தைகளால் வசீகரிப்பவளே !
வாசனையால் மிதக்க வைப்பவளே!
கண்களால் கைது செய்பவளே !
இதயத்தால் இன்முகமாக்குபவளே !
என் காதுமடல் ஓரம் 
உன் இதழ் நடத்திய வேடிக்கை 
          போதும் பெண்னே, 
என் நாட்களை கடத்த !
உன்னை நினைக்கும் 
காதலும் சுகம் தானடி கண்ணே! 
நிஜமான நிமிடங்கள் போதும் பெண்னே 
நம் காதலின் ஆழம் அறிய !